தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஜூலை பணமழை பெறுகின்ற ராசிகள்.. புதன் சூறையாட்டம் தொடக்கம்.. பணத்தின் மிதுக்கப் போவது யார்?

ஜூலை பணமழை பெறுகின்ற ராசிகள்.. புதன் சூறையாட்டம் தொடக்கம்.. பணத்தின் மிதுக்கப் போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 15, 2024 10:03 AM IST

Lord Mercury: புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை நீடிக்கும். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை பணமழை பெறுகின்ற ராசிகள்.. புதன் சூறையாட்டம் தொடக்கம்.. பணத்தின் மிதுக்கப் போவது யார்?
ஜூலை பணமழை பெறுகின்ற ராசிகள்.. புதன் சூறையாட்டம் தொடக்கம்.. பணத்தின் மிதுக்கப் போவது யார்?

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசன் ஆக வழங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இந்நிலையில் புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். ஜூன் 16ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசியாகும். வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசிக்கு செல்கிறார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.