தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு வெளுக்கப் போகும் ராசிகள்.. தலைகீழாக தண்ணீர் குடிக்க போவது உறுதி.. நீங்க என்ன ராசி?

குரு வெளுக்கப் போகும் ராசிகள்.. தலைகீழாக தண்ணீர் குடிக்க போவது உறுதி.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 30, 2024 03:33 PM IST

Lord Guru: ஜூன் மூன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். இவருடைய உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளது அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.

குரு வெளுக்கப் போகும் ராசிகள்.. தலைகீழாக தண்ணீர் குடிக்க போவது உறுதி.. நீங்க என்ன ராசி?
குரு வெளுக்கப் போகும் ராசிகள்.. தலைகீழாக தண்ணீர் குடிக்க போவது உறுதி.. நீங்க என்ன ராசி?

Lord Guru: நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடிய குரு பகவான். வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். அதற்குப் பிறகு இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள் இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் இடமாற்றம் என்றால் அது குரு பகவானின் இடமாற்றம்தான்.

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அந்த வகையில் ஜூன் மூன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். இவருடைய உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளது அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.

ரிஷப ராசி

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாக்கி உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற செலவுகளை பொறுத்துக் கொள்வது நல்லது. உறவினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் மந்தமாக இருக்கும். நண்பர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 12வது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். 

குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்தத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொண்டை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும். பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். 

உடல் ஆரோக்கியத்தை தனிப்பட்ட கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். கடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9