தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Rasis That Lord Rahu Needs To Be Very Careful About

Lord Rahu: ராகு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை மணி

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 29, 2024 12:45 PM IST

ராகு பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து காண்போம்.

ராகு பெயர்ச்சி
ராகு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் ராகு பகவான் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை ராகு பகவான் மாற்றுகிறார்.

மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானால் இந்த ஆண்டு அனைத்து விதமான ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் சிரமமான சூழ்நிலையை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

ராகு பகவானின் தாக்கத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அவர் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரிய தடைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் வந்து செல்லும்.

தனுசு ராசி

 

இந்த ஆண்டு ராகு பகவான் உங்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார். வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். ராகு பகவான் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி உடலை பார்த்துக் கொள்ள வேண்டும் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கை தேவை. குடும்ப விஷயங்களில் பொறுமையாக இருப்பது நல்லது.

கும்ப ராசி

 

ராகு பகவானால் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான செலவுகள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. பயணம் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்மறையான விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தனி கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel