தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru Mars: குரு செவ்வாய் பொட்டிக் கொடுக்கப் போகின்றனர்.. பறந்து பிடிக்கும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Lord Guru Mars: குரு செவ்வாய் பொட்டிக் கொடுக்கப் போகின்றனர்.. பறந்து பிடிக்கும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 01, 2024 05:40 PM IST

Lord Guru Mars: ஜூலை மாதம் ரிஷப ராசியில் குரு மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராஜகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது.

குரு செவ்வாய் பொட்டிக் கொடுக்கப் போகின்றனர்.. பறந்து பிடிக்கும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
குரு செவ்வாய் பொட்டிக் கொடுக்கப் போகின்றனர்.. பறந்து பிடிக்கும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Lord Guru Mars: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த மே ஒன்றாம் தேதி என்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தற்போது தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.