Lord Rahu: ராஜநடை தரும் ராகு.. இனிமே நீங்கதான் ராஜா.. ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்-let us see about the rasis in which lord rahu gets full support of fortune - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: ராஜநடை தரும் ராகு.. இனிமே நீங்கதான் ராஜா.. ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்

Lord Rahu: ராஜநடை தரும் ராகு.. இனிமே நீங்கதான் ராஜா.. ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 14, 2024 12:37 PM IST

Rasis: ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனிபகவானின் நட்சத்திரமாகும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை சில ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ராஜநடை தரும் ராகு.. இனிமே நீங்கதான் ராஜா.. ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்
ராஜநடை தரும் ராகு.. இனிமே நீங்கதான் ராஜா.. ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனிபகவானின் நட்சத்திரமாகும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை சில ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் ராகு பகவான் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். கவலைகளால் நீங்கள் கஷ்டப்பட்டு வந்திருந்தால் அது நிவர்த்தி அடையும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அனுமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குடும்பத்தின் மகிழ்ச்சி அடைவிற்கும்.

துலாம் ராசி

ராகு பகவான் உங்களுக்கு திடீர் பணவரவை கொடுக்க போகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வேலை செய்யும். இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அதிர்ஷ்ட தேவதையை உங்களை தேடி வந்துவிட்டார். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிக ராசி

ராகு பகவான் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9