தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Rasis In Which Lord Mars Gets Yoga

Mars: பணத்தை கொட்டப் போகும் செவ்வாய்..3 ராசிகளுக்கு ராஜயோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 28, 2024 03:01 PM IST

செவ்வாய் பகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனிபகவானின் ராசியான மகர ராசியில் நுழைந்தார். மகர ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்த காரணத்தினால் அவருடைய நான்காவது பார்வை சில ராசிகளுக்கு பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்து தருகின்றது.

பொதுவாக செவ்வாய் பகவான் ஒவ்வொரு முறையும் ராசி மற்றும் செய்யும்பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். தற்போது செவ்வாய் பகவானின் நான்காவது பார்வை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்கள் ராசியில் அவருடைய நான்காவது பார்வை மிகவும் சுகமாக அமைந்துள்ளது. உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவானின் நான்காவது பார்வை உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் விழுகின்ற காரணத்தினால் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நிதி நன்மைகள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு நன்மைகள் செய்வார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மராசி

 

செவ்வாய் பகவானின் நான்காவது பார்வை உங்களுக்காக அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் நிறைவடையும். வழக்கத்தை விட மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வணிகத்தில் இருமடங்கான லாபங்கள் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும் சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மொத்தத்தில் உங்களுக்கு அருமையான காலமாக இந்த செவ்வாய் பகவானின் நான்காவது பார்வை காலம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் சிக்கல்கள் ஏதும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel