தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The People Of The Zodiac Who Get Rajayoga Due To The Transit Of Mars

Mars Luck: பெயர்ச்சி அடையும் செவ்வாய்.. 2 நாட்களில் பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 04, 2024 12:47 PM IST

செவ்வாய் பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

தற்போது செவ்வாய் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று மகர ராசியில் இடம் மாற உள்ளார். மார்ச் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

மகர ராசியில் நுழையும் செவ்வாய் பகவானால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றன. அந்த வகையில் சுப பலன்களை பெற போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

துலாம் ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கொடுக்க போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய வேலை உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக அமையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மேஷ ராசி

 

உங்களுக்கு அனைத்து விதமான பலன்களையும் செவ்வாய் பகவான் கொடுக்க போகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்