தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The People Of The Zodiac Who Are Going To Face Problems Due To Lord Mercury

Mercury: புதன் பகவானிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 09, 2024 02:51 PM IST

புதன் பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் ஒவ்வொரு முறையும் ராசியை மாற்றும் பொழுதும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். குறுகிய காலத்தில் இடம் மாறுகின்ற காரணத்தினால் சுப மற்றும் அசுப பலன்கள் வெகு விரைவில் முடிந்து விடும்.

இந்நிலையில் புதன் பகவான் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சனி பகவானின் சுந்தர் ஆசியான மகர ராசியில் நுழைந்தார். சனி பகவானும் புதன் பகவானும் நட்பு கிரகமாக இருந்தாலும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்க உள்ளது. அந்த வகையில் புதன் பகவானால் சிரமப்படப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நுழைந்து பயணம் செய்து வருகின்றார். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணத்தை சேமித்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மதிப்புமிக்க பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் உடமைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இடமாற்றம் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழிலில் பெரிய முடிவுகளை எடுக்கும் பொழுது யோசிக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையாக அமைந்துள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க நேரிடும்.

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டால் அமைதியாக இருப்பது நல்லது. புதன் பகவானால் ஏற்படக்கூடிய சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் விஷ்ணு பகவானை வழிபட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.