Tamil News  /  Astrology  /  Let Us Find Out The Rasis That Get Good Results From Rahu Ketu Nakshatra Transit

Nakshatra Transit: ராகு கேது யோகத்தை பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 14, 2024 10:59 AM IST

ராகு கேது நட்சத்திரமாற்றத்தால் நல்ல பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் சனி பகவானுக்கு பிறகு அனைவரும் ராகு கேதுவை கண்டால் அச்சப்படுவார்கள். நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய ராகு கேது, ராசி மாற்றம் செய்வதுபோல நட்சத்திர இடம் மாற்றமும் செய்வார்கள். அந்த வகையில் ராகு கேதுவின் நட்சத்திர இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் நல்ல விளைவுகளை சந்திக்கப்போகும் ராசிகளை காண்போம்.

மேஷ ராசி

 

ராகு மற்றும் கேது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிம்மதியான வாழ்க்கை உருவாகும். திருமணத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வருமானத்திலிருந்து தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ரிஷப ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மிதுன ராசி

 

காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எந்த சிக்கல்களும் இருக்காது. குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.