கேது.. 2025-ல் தாறுமாறு தாண்டவம்.. தலையில் விழப்போகிறது.. இந்த ராசிகள் இனி அந்தரத்தில்.. நீங்க என்ன ராசி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கேது.. 2025-ல் தாறுமாறு தாண்டவம்.. தலையில் விழப்போகிறது.. இந்த ராசிகள் இனி அந்தரத்தில்.. நீங்க என்ன ராசி?

கேது.. 2025-ல் தாறுமாறு தாண்டவம்.. தலையில் விழப்போகிறது.. இந்த ராசிகள் இனி அந்தரத்தில்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 02, 2024 04:52 PM IST

Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கேது.. 2025-ல் தாறுமாறு தாண்டவம்.. தலையில் விழப்போகிறது.. இந்த ராசிகள் இனி அந்தரத்தில்.. நீங்க என்ன ராசி?
கேது.. 2025-ல் தாறுமாறு தாண்டவம்.. தலையில் விழப்போகிறது.. இந்த ராசிகள் இனி அந்தரத்தில்.. நீங்க என்ன ராசி?

ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். இந்நிலையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு 9 இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அன்று கேது பகவான் சிம்ம ராசியும் நுழைகின்றார். அதற்கு பிறகு 18 மாதங்கள் அதே ராசியில் பயணம் செய்வார். 

கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் இடம் மாறப் போகின்றார். இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்ற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். சக ஊழியர்களால் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்களால் உதவி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரம் செழிப்பாக இருக்கும். லாபத்தை ஈட்டக்கூடிய புதிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

குடும்பத்தினர் ரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நண்பர்களோடு புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான மகிழ்ச்சியான தருணங்கள் உங்களைத் தேடி வரும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

துலாம் ராசி

கேது பகவானின் சிம்மராசி பயணத்தால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக மாறப் போகின்றது. உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சேது பகவான் செஞ்சாரம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு புதிய அடையாளம் கிடைக்கக்கூடும். வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கப்படும்.

கேது பகவானின் சஞ்சார காலத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான விருப்பங்கள் நிறைவேறக்கூடும். பல்வேறு விதமான இலக்குகளை நீங்கள் முழு கவனத்தோடு செயல்பட்டால் வெற்றி காணலாம். அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். அனைத்திலிருந்தும் உங்களுக்கு விரும்பிய பலன்கள் கிடைக்கும். 

அதே சமயம் காதல் விவகாரத்தில் நீங்கள் மிகவும் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். உடன் பிறந்தவர்களோடு உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் எப்போதும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner