Thaipusam 2025: தைப்பூசத்தன்று தமிழ்க்கடவுள் முருகனை வழிபடும் முறை, நேரம், விரதமுறை அறிந்துகொள்வோமா?
Thaipusam 2025: தைப்பூசத்தன்று தமிழ்க்கடவுள் முருகனை வழிபடும் முறை, நேரம், விரதமுறைகள் குறித்துப் பார்ப்போம்.

Thaipusam 2025: வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
தைப்பூசம் என்கிற விரத நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும்; எப்படி முருகனை வழிபட வேண்டும் என்பது பற்றி ஆத்ம ஞான மையம் யூட்யூப் சேனலின் சார்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறுவதாவது, ‘’ முருக வழிபாடு என்று யோசித்தாலே, அது நம் வாழ்வில் வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய வழிபாடு. எதை நினைக்கிறோமோ, நினைத்ததை நினைத்த வண்ணமே முருகப்பெருமான் நடத்தி தருகிறார். நமக்கு ஏற்படும் அல்லல்களை நீக்கும் வழிபாடு கந்தர் கடவுளின் வழிபாடு. அப்படிபட்ட முருகப்பெருமானுக்கு விரதமிருந்து அனுஷ்டிக்கும் திருநாள் தான், தைப்பூசத் திருநாள்.
பொதுவாக தைப்பூச விரதம் என்பது முருகனுக்கு மாலையணிந்து பாதையாத்திரையாக ஒரு 30 நாளோ, 48 நாளோ விரதமாக இருப்பார்கள். குறிப்பாக, பழனி முருகனுக்கு கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, மார்கழியில் முழுதாக விரதமிருந்து, தைப்பூசத்தில் முருகனை வழிபட்டு வருவார்கள். தைப்பூசத்துக்கு முன்போ, பின்போ கூட வழிபட்டுவிட்டு வருவார்கள்.
தைப்பூச ஒருநாள் விரதமுறை:
ஒரு நாள் விரதம் இருக்கலாம்: காலையில் இருந்து மாலை வரை உண்ணாமல் நோன்பு இருந்து மாலையில் வீட்டில் முருகப்பெருமானை வழிபட்டு, நைவேத்தியங்கள் படைத்து அதன்பின் உணவு உண்ணலாம்.
யார் இந்த விரதத்தை இருக்கலாம்?: முருகன் மீது பிரியம் வைத்தவர்கள் அத்தனைபேரும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். குறிப்பாக, குழந்தை வேண்டுபவர்கள், திருமணம் நடக்கணும், நிறைய பிரச்னைகள் இருக்குது என்று நினைப்பவர்கள் இப்படி நிறைய பிரச்னைகள் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம்.
முடிந்தவர்கள் உண்ணாநோன்பு இருங்கள். முடியாதவர்கள் பழங்களோ, மோரோ, இளநீரோ எடுத்துக்கொள்ளுங்கள்.
கர்ப்பமாக இருப்பவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உணவு எடுத்துக்கொண்டு உங்கள் வழிபாட்டை கடைப்பிடிக்கலாம்.
தைப்பூசத்தன்று என்ன செய்யலாம்:
விரதம் இருக்க முடியாதவர்கள், அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு அரை லிட்டர் பால் வாங்கிக் கொடுத்துவிட்டு, அபிஷேகம் பார்ப்பது நல்லது.
கோயில் செல்லமுடியாதவர்கள் வீட்டில் முருக விக்கிரகத்திற்கு பால் அபிஷேகம் செய்யலாம். விக்கிரகம் இல்லாதவர்கள், முருகனின் திருவுருவப் படத்துக்கு முன் ஒரு டம்ளர் பாலை படைத்து வழிபாடு செய்யலாம். வீட்டில் வழிபடுவதற்கு ஒரு இனிப்பு ஒன்று செய்துகொள்ளுங்கள். சர்க்கரைப் பொங்கலோ, பாயாசமோ ஏதோ ஒன்று செய்துகொள்ளலாம்.
நடப்பாண்டு தைப்பூசம் செவ்வாய்க்கிழமைக்கு வருவது மிகுந்த விஷேசம். காலையில் எழுந்து தலைக்கு நீராடிவிட்டு, முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் எதுவென்றாலும் சாத்தி வழிபடலாம். நன்கு சந்தனம் குங்குமம் பூசி, தீப தூப ஆராதனை செய்ய வேண்டும்.
என்ன படிக்க வேண்டும்:
திருப்புகழ் படிக்கலாம். கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல்மாறல் இவற்றையெல்லாம் படிக்கலாம்.
இது எதுவுமே செய்யமுடியாதவர்கள், மேலே சொன்ன நூல்களில் இருக்கும் பதிகங்களைப் படித்து மனதிற்குள் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
தைப்பூசத்தன்று வள்ளலார் ஜோதி சொரூபமாக காட்சியளித்த நாள். ஒரு திருவிளக்கினை ஏற்றி, ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என வள்ளலாருக்கு, உங்களது உணவினை இலையில் படைத்து நைவேத்தியம் செய்யலாம்.
இந்த மந்திரம் பயத்தைப்போக்கும் மந்திரம். இந்த மந்திரத்தைச் சொல்லி, கண்டிப்பாக யாருக்காவது அன்னதானம் செய்யுங்கள். வறுமை சூழலில் இருப்பவர்கள் நாய்க்கோ, பூனைக்கோ உணவளியுங்கள்.
மேலும் படிக்க: முருகப்பெருமானின் விஷேசமான இந்த ஆலயம் பற்றி தெரியுமா?
மேலும் படிக்க: தைப்பூசத்தில் நடந்த ஒரு சிறப்பு வழிபாடு
தைப்பூச நேரம்:
10.02.2025 அன்று மாலை 7:13 மணி முதல் 11.02.2025 மாலை 7:31 மணிக்குள், பூச நட்சத்திரம் அமைந்து இருக்கிறது.
பெளர்ணமி எப்போது ஆரம்பிக்கிறது என்றால், வரும் பிப்.11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 7:51 மணிக்கு பெளர்ணமி தொடங்குகிறது.
தைப்பூச நட்சத்திரம் இருக்கும் வேளையில் அபிஷேகம் ஆராதனை செய்து வழிபடுவது என்பது சிறப்பு’’ என ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி பேசியிருக்கிறார்.
நன்றி: ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி, ஆத்ம ஞான மையம் யூட்யூப் சேனல்!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்