தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Know About The History Of Thabasu Malai Balathandayuthapani Temple Here

HT Yatra: தம்பதியை சேர்க்கும் தபசு மலை முருகன்.. பிணிகளைப் போக்கும் மூலிகை பிரசாதம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 26, 2024 05:30 AM IST

தபசுமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

தபசுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
தபசுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் எத்தனையோ புராண வரலாறுகளைக் கொண்ட கோயில்கள் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தபசுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்.

இந்த திருக்கோயிலில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் இங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தில் மூலிகை கலக்கப்பட்டு இருக்கும். மேலும் இந்த மழையின் அடிவாரத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட குடவரைக் கோயில் காணப்படுகிறது.

தலத்தின் பெருமை

இந்த கோயிலில் வழிபாடு செய்ய செல்லப்படும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு நோய் உள்ளிட்டவைகள் அனைத்தும் குணமாகும் என நம்பப்படுகிறது.

கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் இங்கு வீற்றிருக்கக்கூடிய முருக பெருமானை வழிபட்டால் அனைத்துவித தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது.

மேலும் இந்த கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் வீற்றிருக்கின்றார் இவரை வழிபாடு செய்தால். துர் சக்திகள் நம்மை நெருங்காது என்பது ஐதீகமாகும். நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை உடனே தீர்த்து வைப்பார் எனவும் நம்பப்படுகிறது.

கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து ஒருமுறை தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை சார்பில் இருந்து குடித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆழ்ந்த வேண்டுதலுக்கு முருக பெருமான் ஞான அறிவை கொடுப்பார் என நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை வழிபட்டால் பிரிந்த கணவன் மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள் என கூறப்படுகிறது. மேலும் அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

 

பொதுவாகவே முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். அதேபோல இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல வைகாசி விசாகம், ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடி வெள்ளிகள், நவராத்திரி, சூரசம்ஹாரம், கார்த்திகை திருநாள், மார்கழி மாத பூஜை என அனைத்து விதமான சிறப்பு நாட்களிலும் வெகு விமர்சையாக பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

குறிப்பாக தமிழ் புத்தாண்டு திருநாளில் இந்த கோயிலில் உற்சவ திருநாள் கொண்டாடப்படுகிறது.

தல வரலாறு

 

ஒரு காலத்தில் இந்த கோயிலில் அப்போது இருந்த முனிவர்கள் முருகப்பெருமானின் வேலை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். அதற்குப் பிறகு முருகப்பெருமானின் அருளால் பல்வேறு விதமான வேண்டுதல்கள் நிறைவேறியதால் பக்தர்கள் ஒன்று சேர்ந்து முருகப்பெருமானுக்கு விக்கிரகம் அமைத்து பூஜை நடத்தி கோயில் எழுப்பி வழிபாடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

அமைவிடம்

 

புதுக்கோட்டையில் இருந்து இந்த தபசுமலை 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன வசதிகளும் உள்ளன.

WhatsApp channel