Lagna athi yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ லக்குகளை அள்ளித் தரும் லக்ன அதியோகம் யாருக்கு! கோடிகளை குவிக்கலாம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lagna Athi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ லக்குகளை அள்ளித் தரும் லக்ன அதியோகம் யாருக்கு! கோடிகளை குவிக்கலாம்!

Lagna athi yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ லக்குகளை அள்ளித் தரும் லக்ன அதியோகம் யாருக்கு! கோடிகளை குவிக்கலாம்!

Kathiravan V HT Tamil
Published Jul 13, 2024 09:08 PM IST

Lagna athi yogam: ஒளியை பிரதிபலிப்பதில் சந்திரனுக்கு நிகராக லக்னமும் எப்போது செயல்படும். ஏனென்றால் சூரியனின் ஒளி குவிக்கும் இடம்தான் லக்னம் ஆகும். லக்ன அதி யோகமும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகமாக விளங்குகின்றது.

Lagna athi yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ லக்குகளை அள்ளித் தரும் லக்ன அதியோகம் யாருக்கு! கோடிகளை குவிக்கலாம்!
Lagna athi yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ லக்குகளை அள்ளித் தரும் லக்ன அதியோகம் யாருக்கு! கோடிகளை குவிக்கலாம்!

இது போன்ற போட்டோக்கள்

சந்திர அதியோகம் பற்றி தெரியுமா?

ஜோதிடத்தில் சந்திர அதியோகம் பற்றி நீங்கள் அறிந்து இருக்கலாம். ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 6,7,8ஆம் இடத்தில் சுபகிரகங்கள் இருந்தால் சந்திரனின் ஒளித் தன்மையை பொறுத்து இந்த யோகம் கிடைக்கப் பெறும். 

லக்ன அதியோகத்தின் பங்கு

ஒளியை பிரதிபலிப்பதில் சந்திரனுக்கு நிகராக லக்னமும் எப்போது செயல்படும். ஏனென்றால் சூரியனின் ஒளி குவிக்கும் இடம்தான் லக்னம் ஆகும். லக்ன அதி யோகமும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகமாக விளங்குகின்றது. 

இந்த யோகம் ஜாதகரை இலட்சியங்களை அடைவதற்காக முயலும் யோகமாக லக்ன அதியோகத்திற்கு உண்டு. 

லக்ன அதியோகம் எப்படி உண்டாகிறது

லக்னத்திற்கு 6, 7, 8ஆம் இடங்களில் லக்னம் தனது ஒளியை சிதறடிக்கும். இந்த லக்ன ஒளி சிதறும் இடத்தில் இயற்கை சுபர்கள் என்று சொல்லக்கூடிய குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் வரிசையாக அமர்ந்தாலோ, அல்லது மூவரும் கூடி 6, 7, 8ஆம் இடங்களில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தாலோ, அல்லது இருவர் ஒரு ராசியிலும், ஒருவர் ஒரு ராசியிலும் பிரிந்து இருந்தாலோ, இவர்கள் வேறு தீய கோள்களின் தொடர்பு இல்லாத போது ஜாதகர் லக்ன அதி யோகத்தை அடைகிறார்.  இந்த யோகம் கிடைக்க லக்னத்தில் பாவ கிரகங்கள் என சொல்லப்படக் கூடிய சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இருக்க கூடாது. மேலும் புதன், சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்களுடன் சூரியன் சேர்ந்து இருக்க கூடாது. 

லக்னத்தில் பாவிகள் இருக்க கூடாது 

இந்த யோகம் சந்திர அதி யோகத்தை அதிக பலன்களை தரக்கூடியதாக உள்ளது. சந்திர அதியோக விதிகளில் சந்திர பகவான் ஒளி பொறுந்தியவராக இருப்பது அவசியம். ஆனால் லக்ன அதியோகத்தில் லக்னம் பங்கப்படாமல் இருக்க வேண்டும். இதில் லக்னாதிபதி மறைவதோ, பாவியாக இருப்பதோ கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

யோகத்தின் பலன்கள்

லக்ன அதியோகம் பெற்றவர்கள் செயற்கரிய செயல்களை செய்து புகழ் பெறுவார்கள். பிறர் முயற்சித்து முடியாமல் போன விஷயங்களை செய்து சாதனை படைப்பார்கள். இதனால் இவர்களுக்கு புகழ் கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.