Ezhuthari Nathar: இலக்கணம் அருளும் சிவபெருமான்.. கல்வி அருள் தரும் எழுத்தறிநாதர்.. சூரியன் வழிபட்ட தலம்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ezhuthari Nathar: இலக்கணம் அருளும் சிவபெருமான்.. கல்வி அருள் தரும் எழுத்தறிநாதர்.. சூரியன் வழிபட்ட தலம்..!

Ezhuthari Nathar: இலக்கணம் அருளும் சிவபெருமான்.. கல்வி அருள் தரும் எழுத்தறிநாதர்.. சூரியன் வழிபட்ட தலம்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 23, 2025 06:40 AM IST

Ezhuthari Nathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இன்னம்பூர் அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வைத்திருக்கக்கூடிய சிவபெருமான் எழுத்தறி நாதர் எனவும் தாயார் நித்தியகல்யாணி மற்றும் சுகந்த குந்தலாம்பாள் என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Ezhuthari Nathar: இலக்கணம் அருளும் சிவபெருமான்.. கல்வி அருள் தரும் எழுத்தறிநாதர்.. சூரியன் வழிபட்ட தலம்..!
Ezhuthari Nathar: இலக்கணம் அருளும் சிவபெருமான்.. கல்வி அருள் தரும் எழுத்தறிநாதர்.. சூரியன் வழிபட்ட தலம்..!

இது போன்ற போட்டோக்கள்

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக பல வரலாறுகளை சுமந்து வருகின்றன. நமது தமிழ்நாட்டில் எத்தனையோ சிவபெருமான் கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இன்னம்பூர் அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வைத்திருக்கக்கூடிய சிவபெருமான் எழுத்தறி நாதர் எனவும் தாயார் நித்தியகல்யாணி மற்றும் சுகந்த குந்தலாம்பாள் என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

தல சிறப்பு

இந்த எழுத்தறிநாதர் திருக்கோயில் காவிரி வடகரை தலங்களில் தேவார பாடல்கள் பெற்ற 45 வது தலமாக திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலில் வீற்றி இருக்கக்கூடிய சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். இந்த கோயிலில் வழிபட்டால் கல்வியில் அபிவிருத்தி கிடைக்கும் என்பது ஐதீகமாக திகழ்ந்து வருகிறது.

கல்வி அறிவில் குறைவாக இருக்கக்கூடியவர்கள் வழிபடும் தலமாக இந்த கோயில் விளங்கி வருகிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக இந்த எழுத்தறிநாதர் கோயில் திகழ்ந்து வருகிறது. சிவபெருமானின் தேவாரப் பாடலில் இருக்கக்கூடிய 274 கோயில்களில் இது 45 ஆவது கோயிலாக திகழ்ந்து வருகிறது.

பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கு இங்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், பேச்சுதிறமை வரும் என்பது ஐதீகமாக திகழ்ந்து வருகிறது. இந்த திருக்கோயிலில் அம்பாள் தினமும் கல்யாண கோலத்தில் காட்சிப்படுத்து வருகிறார். இது சூரிய பகவான் பூஜை செய்த கோயிலாக திகழ்ந்து வருகிறது. இங்கு சுகந்த குந்தல அம்பாள் அமர்ந்த காலத்தில் காட்சி கொடுத்த வருகிறார். திருமணமாகாத பெண்கள் இங்கு வீற்றிருக்கக்கூடிய நித்திய கல்யாணி அம்பாளை வணங்கி செல்கின்றனர்.

தல வரலாறு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னனின் கணக்காளராக சுதன்மன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். ஒருமுறை அவர் காட்டிய கணக்கு மன்னனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் காரணமாக உரிய கணக்கை சரியாக காட்டும் படி உத்தரவிட்டார் மன்னன். இல்லையென்றால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சரியான கணக்கை காண்பித்தும் நமக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என சுதன்மன் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்து சிவபெருமானை பூஜை செய்துள்ளார். உடனே தனது பக்தனின் உருவத்தில் சென்று கணக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை மன்னனுக்கு சிவபெருமான் எடுத்துரைத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து பயத்தோடு சுதன்மன் கணக்கு காட்டுவதற்காக மன்னனிடம் சென்றுள்ளார். உடனே ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் எதற்கு காட்ட வருகிறீர்கள் என மன்னர் கேட்டுள்ளார். அப்படி என்றால் தனக்கு பதிலாக வந்தது சிவபெருமான் தான் என சுதன்மன் மன்னனிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தனது தவறை உணர்ந்த மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டு சிவபெருமானுக்கு கோயில் ஒன்றே எழுப்பி உள்ளார். அவருக்கு எழுத்தறிநாதர் என்ற திருநாமத்தை கொடுத்துள்ளார். இந்த திருக்கோயில் அகத்தியருக்கு இறைவன் இலக்கணம் உபதேசம் செய்த கோயிலாக திகழ்ந்து வருகிறது.

இந்த திருக்கோயிலில் இரண்டு அம்பாள் சன்னதி உள்ளது ஒருவர் சுகந்த குந்தலாம்பிகை என்ற திருநாமத்திலும் மற்றொருவர் நித்திய கல்யாணி என்ற திருநாமத்திலும் காட்சி கொடுத்து வருகின்றன.

சூரிய பகவான் இந்த திருக்கோயிலில் வழிபாடு செய்து அதிக ஒளியை பெற்றதால் அவருக்கு இனன் என்ற பெயர் வழங்கப்பட்டது. சிவபெருமானை நம்பி வழிபட்ட காரணத்தினால் இனன் நம்பு ஊர் என்று பெயர் உருவாயிற்று. அதுவே தற்போது இன்னம்பூர் என அழைக்கப்பட்டு வருகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்