Kula Deivam : குல தெய்வ வழிபாடு விஷயத்தில் இப்படி ஒரு குழப்பமா.. யாருக்கு குல தெய்வம் மாறும் இந்த ரகசியத்தை பார்க்கலாம்!
Kula Deivam : திருமணம் முடிந்த உடனே பெண்களுக்கு குல தெய்வம் என்பது கணவன் வீட்டு குல தெய்வத்தை அவர்களுக்கும் குல தெய்வம் ஆகும் மற்ற படி யாருக்கும் குல தெய்வம் என்பது மாறாது. அதில் தெளிவு வேண்டும். ஒருவருடைய இஷ்ட தெய்வம் அடிக்கடி மாறலாம். ஆனால் ஆண்களை பொறுத்த வரை குல தெய்வம் மாறவே மாறாது.
Kula Deivam : காலம் காலமாக நம் முன்னோர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வத்தை வழிபட்டார்களோ அதுவே நமக்கும் குல தெய்வம். அதனால் எப்போதும் நாம் குல தெய்வத்தை மாற்ற முடியாது. குறிப்பாக பெண்களுக்கு குல தெய்வம் மாறும். பெண்கள் திருமணம் முடியும் முன் தந்தை வீட்டு குல தெய்வத்தை வழிபடுவர். அதுவே திருமணம் முடிந்த உடனே பெண்களுக்கு குல தெய்வம் என்பது கணவன் வீட்டு குல தெய்வத்தை அவர்களுக்கும் குல தெய்வம் ஆகும் மற்ற படி யாருக்கும் குல தெய்வம் என்பது மாறாது. அதில் தெளிவு வேண்டும். ஒருவருடைய இஷ்ட தெய்வம் அடிக்கடி மாறலாம். ஆனால் ஆண்களை பொறுத்த வரை குல தெய்வம் மாறவே மாறாது.
குல தெய்வ வழிபாடு அவசியம் ஏன்
நாம் ஒவ்வொரு காரியத்தை துவங்கும் முன்னும் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும். நமது குலம் விருத்தி அடைய வேண்டும் என்றால் குல தெய்வ வழிபாடு கட்டாயம்.
நம் முன்னோர்கள் காலத்தில் மறைந்த முன்னோர்களை குல தெய்வமாக ஏற்று பரம்பரை பரம்பரையாக வழிபட ஆரம்பித்தனர். இப்படி நம் முன்னோர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாக வழிபடுவார்களோ அதுவே நமக்கும் குல தெய்வம்.
குலதெய்வ வழிபாடு எப்போது செய்ய வேண்டும்?
நாம் வீட்டில் தினமும் பூஜை செய்யும் போது முதன்மையான நமது குல தெய்வதை வணங்க வேண்டும். அதேபோல் நம் வீட்டில் திருமணம், புது வீடு கட்டுவது, கார் வாங்குவது, உள்ளிட்ட எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வதை வணங்க வேண்டும். நான் எடுக்கும் காரியம் தடைகள் இன்றி வெற்றி பெற அருள் தர வேண்டும் என்று குல தெய்வத்தை வணங்கிய பிறகு நமது வேலைகளை தொடங்கினால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை
காணிக்கை
நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் குல தெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வைப்பது நல்லது. பொதுவாக நாம் வீட்டில் குல தெய்வத்தை வணங்கி சில முயற்சிகளை தொடங்கும் முன் சுத்தமான துணியில் மஞ்சளைநன்றாக நனைக்க வேண்டும். அதில் நம் விருப்பப்படி காசை முடிந்து வைத்து வணங்க வேண்டும். பின்னர் நாம் குல தெய்வம் கோயிலுக்கும் செல்லும் போது அந்த காணிக்கையை அங்கு கொண்டு போய் உண்டியலில் சேர்த்து விடலாம்.
அது மட்டும் இல்லை. நம் முன்னோர்கள் நமது குல தெய்வத்தை எப்படி வணங்கி வந்தனரோ அப்படியே நாமும் நமது குல தெய்வத்தை வணங்க வேண்டும். நமது குழந்தைகளுக்கும் அப்படியே அதை பழக்க வேண்டும். குறிப்பாக நம் குல தெய்வத்திற்கு அசைவ படையல் வைத்து வழிபாடு நடத்தினால் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். சில நேரங்களில் பொங்கல் வைத்து சைவ உணவுகள் படைத்து வழிபாடு நடத்தி இருந்தால் நாமும் அப்படி செய்ய வேண்டும்.
குல தெய்வங்கள் பெரும்பாலும் திறந்த வெளியில் பீடம் அமைத்து வழிபாடு செய்திருந்தால் நாமும் அப்படியே வழிபட வேண்டும். மேலும் கோயில் கட்டுவது என்றாலும் முறையாக குல தெய்வத்திடம் அனுமதி பெற்ற கோயில் கட்ட வேண்டும் என்பது ஐதீகம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்