Kubera Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை! கோடிகளில் குளிக்க வைக்கும் குபேர யோகம் எந்த ராசிக்கு?’இதோ விவரம்!
”Kubera Yogam: பழங்கால ஜோதிட நூலில் குபேர யோகம் பற்றி பாடலே உள்ளது ஒவ்வொரு லக்கினத்திற்கும், கிரக அமைப்பும், நட்சத்திரமும் நிற்கும் அமைப்பை பொறுத்து குபேர யோகம் ஏற்படுகிறது”
யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் ’குபேர யோகம்’ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒருவருடைய ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் அவர்கள் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரராகவோ இளமையிலேயே மாறக்கூடிய வாய்ப்பு இருக்கும், அதற்கு லக்னாதிபதி ஆட்சி அல்லது உச்சத்தில் இருக்கவேண்டும் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகிறது.
ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும், ஆட்சி அல்லது உச்சம் பெற்று தனாதிபதியுடன் இணைந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் லட்சுமி யோகம் செயல்படும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்,
ஆனால் குபேர யோகத்தை பொறுத்தவரை, கும்ப லக்னத்திற்கு அனுஷம் 4-ல் செவ்வாய் நின்று, உச்ச சந்திரனால் பார்வையாகி, லக்ன சூரியன் சிம்ம குருவால் பார்வை பெற்றும் போது குபேர யோகம் ஏற்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இந்த குபேர யோகத்தை பெற்றவர்கள் கோடிகளை குவித்து வாழ்கையில் பெரும் செல்வம் சேர்ப்பார்கள். குபேர யோகம் பெற முடியாத ஒரு சில கிரகங்களே மாற்றம் அடைந்திருக்கும் ஜாதகர்கள் அதற்கான கிரக யோக வழிபாட்டை கண்டுபிடித்து செய்வதால் நிறைவான யோகம் பெற்று வாழலாம்.
விருச்சிக லக்னத்திற்கு அனுஷம் 4ல் செவ்வாய் நின்றிட 10ல் சூரியன் ஆட்சியாகி 4ல் சந்திரன் நின்று சூரியனைப் பார்க்க 5ல் குரு அமர்ந்து செவ்வாயைப் பார்க்க வாழ்வில் உயர்ந்த குபேர யோகம் உண்டு.
மேஷ லக்னத்திற்கு அவிட்டம் 4-ல் செவ்வாய் நிற்க துலாச்சந்திரன் சூரியனை நோக்க சிம்ம குரு, சூரியன், செவ்வாயை பார்க்க பல கோடிகளுக்கு அதிபதி ஆவார்.
பழங்கால ஜோதிட நூலில் குபேர யோகம் பற்றி பாடலே உள்ளது ஒவ்வொரு லக்கினத்திற்கும், கிரக அமைப்பும், நட்சத்திரமும் நிற்கும் அமைப்பை பொறுத்து குபேர யோகம் ஏற்படுகிறது.
ஜாதகத்தில் குபேர யோகம் இருந்தாலும், அதன் பலன்கள் முழுமையாக கிடைக்க நல்ல கர்ம வினைகள் தேவை. தானம் செய்வதன் மூலம் குபேரனின் அருளை பெறலாம். ஏழை எளியோருக்கு உணவு, உடை, பணம் போன்றவற்றை தானம் செய்யலாம். ஜாதகத்தில் குபேர யோகம் இருக்கிறதா என்பதை அறிய ஜோதிடரிடம் ஆலோசனை பெறவும்.
டாபிக்ஸ்