Stress Management Mantra: மனஅழுத்தம் நீங்க தவறாமல் இதை மட்டும் செய்யுங்கள்..! கவலைகள் நீங்கி நல்ல மாற்றத்தை உணரலாம்
மனஅழுத்தத்தால் சிரமத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் செய்ய வேண்டிய ஜெபம் குறிந்து தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் இருக்கும் உறவுகள் மீது மிக பெரிய நம்பிக்கை எல்லோருக்கும் இயல்பாகவே இருக்கும். அம்மா, அப்பா, பிள்ளைகள், குடும்பம் என இந்த நம்பிக்கையின் வரிசையானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
நாம் வைத்திருக்கும் நம்பிக்கையான விஷயங்களில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் மனஅழுத்தம் இயல்பாகவே தொற்றிக்கொள்ளும் என கூறப்படுகிறது. எனவே மனஅழுத்ததை போக்க நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
நாம் நம்பிக்கை வைத்திருக்கும் நபர் எவ்வாறாக நடந்துகொண்டாலும் அவர்கள் மீது வைத்திருக்கும் பாசம், அன்பு, நம்பிக்கை ஆகியவை குறையாமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும்
மனஅழுத்தத்தை போக்க தபஸ் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. தபஸ் யோகா என்பது ஜெபம் செய்வதாகவும். உங்களது வீட்டில் ஸ்படிக மாலை, துளசி மாலை, ருத்ராட்சை மாலை என எதுவாக இருந்தாலும் அதன் எண்ணிக்கை 54, 108 என இருந்தாலும் அதை ஆள்காட்டி விரலில் மாட்டிக்கொண்டு, கட்டை விரலால் உள்நோக்கி இழுக்க வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் கண்களை மூடி அமர்ந்து "ஓம்" நாமத்தை மூன்று முறை ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு முறை இந்த நாமத்தை சொல்லும்போது ஆழ்ந்த காற்றை உள் இழுத்து பின் வெளியே விட வேண்டும்.
சிவா பெருமானை வேண்டுபவர்கள் சிவாய நம என்றும், மகா விஷ்ணுவை வணங்குபவர்கள் ஓம் நமோ நாரயணாய கையில் இருக்கும் ஜெப மாலையின் சுற்று முடியும் வரை கூற வேண்டும்.
இதை தவறாமல் செய்யும்பட்சத்தில் மெதுமாக மிகப் பெரிய மாறுதலை உணரலாம். மனதில் இருக்க கூடிய கவலைகள் அகன்று மன அழுத்தம் நீங்கும்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்