தமிழ் செய்திகள்  /  Astrology  /  Know About Spritual Benefits Of Sphatik Mala

Sphatik Mala Benefits: செல்வத்தை பெருக்கி, மன அமைதி தரும் ஸ்படிக மாலை! வேறு என்ன நன்மைகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 01, 2024 08:50 PM IST

செல்வத்தை அதிகரிக்கும் தன்மையும், மனதை அமைதியாக வைத்துக்கொள்ளும் ஆற்றலும் கொண்டதாக ஸ்படிக மாலை உள்ளது.

ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்
ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்படி மாலை புனிதமானது என கருதப்படுகிறது. அப்படி பார்க்கையில் லிங்கத்தில் கூட ஸ்படிக லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதிக அளவில் ஒலி அதிர்வலைகளை எழுப்பும் தன்மை கொண்டிருக்கும் இந்த மாலையானது, மனிதன் ஒரு நாளில் சராசரியாக சுவசிப்பதற்கு ஏற்ப ஒலி அதிர்வுகள் வெளிப்படும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்கள். ஒவ்வொரு ஸ்படிக மாலையும் 54, 108 கற்களை கொண்டிருக்கும். வெள்ளி, செம்பு நூலில் கோர்க்கப்பட்ட ஸ்படிக கற்களால் இந்த மாலைகள் அமைந்திருக்கும்.

ஸ்படிகம் எப்படி அணிவது?

ஸ்படிக மாலையை அணிவதற்கு முன்பு அதை நன்கு பன்னீரில் கழுவி, ஒரு மண்டலம் அல்லது 16 நாள்கள் அல்லது ஒரு நாள்கள் முழுமையாகவோ சுவாமியின் பாதத்தில் போட வேண்டும்.

ஸ்படிக மாலைக்கு மகாலட்சுமியின் அனுகிரகம் பூரணமாக இருக்கும். மகாலட்சுமியின் மந்திரத்தை சொல்லும்போது ஸ்படிகம் சுக்கிரன், சந்திரனை ஆதிக்கமாக கொண்டிருப்பதால் சீக்கிரமாக ஈர்க்கும் தன்மையை கொண்டிருக்கும்.

மகலட்சுமி மந்திரத்தை ஜெபித்து ஸ்படிக மாலையை உரு ஏற்றி அற்புதமான மாற்றத்தை கொடுப்பதாக மாற்றவிடலாம். அதன் பின்னர் மாலையை கழுத்தில் மாட்டிக்கொள்ளலாம்.

ஆண், பெண் என இருவரும் இந்த மாலையை அணியலாம். இரவு தூங்கும்போது கழட்டி விட்டு பின்னர் காலையில் நன்கு ஜெபித்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

செல்வத்தை அதிகரிக்கூடிய ஸ்படிகம், சுக்கிரன், சந்திரனின் அற்புதமாக ஆதிக்கத்தை கொண்ட மாலையாக இருந்து வருகிறது.

ஸ்படிகத்தில் சிவலிங்கம், நந்தி, விநாயகர் போன்ற சிலைகள் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு அதன் ஈர்ப்பு சக்தியால் பல நன்மைகள் கிடைக்கும். ஸ்படிக சிலைகளுக்கு வாரம் இரு முறை தண்ணீரில் அபிஷேகம் செய்தால் போதும்.

யாரெல்லாம் ஸ்படிகம் அணியலாம்

நேர்மறையான ஆற்றலை தரும் வல்லமை கொண்டிருக்கும் ஸ்படிகம், அதிகமாக கோபப்படும் நபர்கள், ரத்த கொதிப்பு இருப்பவர்கள், உடம்பில் உஷ்ணம் இருப்பவர்கள் அணிவதால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைத்து வயதினரும் அணியலாம். உஷ்ணம் உள்ள குழந்தைகளுக்கு ஸ்படிகத்தை அரைஞாண் கயிறுடன் சேர்த்து அணியலாம்.

ஸ்படிக மாலையை அணிவதால் எப்போதும் தெய்வ அருள் கிடைக்கும். அதன் அதிர்வலைகள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பதால் மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்க உதவும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நம்மிடம் எப்போதும் எந்த வித தீய சக்திகளையும் நெருங்க விடாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். ஸ்படிக மாலையை தங்கம், வெள்ளி தவிர மற்ற உலோகங்களுடன் இணைந்து அணிவதை தவிர்க்க வேண்டும்.

ஸ்படிக மாலை நன்மைகள்

ஸ்படி மாலை அணிவதால் பயம், பதட்டம் விலகும்

ஸ்படிக மாலை ஒருவருக்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் பொறுமையை கொடுக்கும்

ஜோதிடத்தின் படி, ஸ்படிக மாலை அணிவதன் மூலம் செல்வமும் வெற்றியும் கிடைக்கும்

ஸ்படிக மாலை தீய சக்திகளை விரட்டும் தன்மையை கொண்டுள்ளது விலகும்.

ஸ்படிக மாலை சிந்தனை மற்றும் மன வளர்ச்சியை விரைவுபடுத்துவத செய்கிறது

ஸ்படிக மாலை காய்ச்சல், பித்தம் சம்பந்தமான பிரச்னைகள், ரத்தம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்

உடல் முழுமையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஸ்படிக மாலை மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்