தமிழ் செய்திகள்  /  Astrology  /  Kitchen Vastu Tips: Warning Keeping These Items In The Kitchen May Lead To Cash Shortages

Kitchen Vastu Tips: எச்சரிக்கை.. சமையலறையில் இந்த பொருட்களை வைத்தால் பணத் தட்டுப்பாடு வரலாம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 03, 2024 05:33 PM IST

Vastu Tips: பலர் மீதமுள்ள மாவை சமையலறையில் வைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதை செய்ய வேண்டாம். ராகு மற்றும் சனியின் மோசமான பலன்களால் மாவு இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் அல்லது சமையலறையில் வைத்திருப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது. அது உங்களை எதிர்மறையாக பாதிக்கும்.

சமையலறையில் இந்த பொருட்களை வைத்தால் பணத் தட்டுப்பாடு  வரலாம்!
சமையலறையில் இந்த பொருட்களை வைத்தால் பணத் தட்டுப்பாடு வரலாம்! (pexels)

ட்ரெண்டிங் செய்திகள்

சமையலறையில் நேர்மறை ஆற்றல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அன்னபூரணி தேவி மகிழ்ச்சியாக இருப்பாள். நெருப்புக் கடவுளின் இருப்பிடமும் சமையலறைதான். பெரும்பாலான நேரங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ எதிர்மறை சக்தியை சமையலறையில் வைத்திருப்போம். சமையலறையில் உள்ள எதிர்மறை ஆற்றல் அங்கு தயாரிக்கப்படும் உங்கள் உணவையும் பாதிக்கலாம். 

இது ஆரோக்கியத்தை கெடுக்கிறது. எனவே, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, சில பொருட்களை தவறுதலாக கூட சமையலறையில் வைக்காதீர்கள். சமையலறையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க இந்த பொருட்களை கண்டிப்பாக அகற்றி விடுங்கள். இல்லையெனில் உங்கள் குடும்பம் நிதி சிக்கல்கயில் சிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது உங்கள் குடும்பத்தின் நிம்மதியை இல்லாமல் செய்யக் கூடும்.

சமையலறையில் எதை வைக்கக்கூடாது?

பலர் மீதமுள்ள மாவை சமையலறையில் வைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதை செய்ய வேண்டாம். ராகு மற்றும் சனியின் மோசமான பலன்களால் மாவு இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் அல்லது சமையலறையில் வைத்திருப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது. அது உங்களை எதிர்மறையாக பாதிக்கும். எனவே மாவு மிச்சம் இல்லாத அளவுக்கு மாவை மட்டும் சேர்க்கவும்.

சிலர் சமையலறையை அழகாக்க கண்ணாடியைப் பயன்படுத்துகிறார்கள். நம்மிடம் உள்ள கண்ணாடிப் பொருட்களை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலமாரியில் வைக்கிறார்கள். ஆனால் இவற்றை தவறுதலாக சமையலறையில் வைக்கக்கூடாது. சமையலறையில் கண்ணாடிப் பொருட்களை வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. 

கண்ணாடி வைப்பதால் வீட்டில் உள்ள மகிழ்ச்சியும் அமைதியும் நீங்கும். அதுமட்டுமின்றி அக்னி கடவுளின் பிரதிபலிப்பு கண்ணாடியில் தென்பட்டால் அக்னி கடவுளின் ஆற்றல் அதிகரிக்கிறது. அது குடும்பத்திற்கு நல்லதல்ல.

சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்காக இருப்பது எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருகிறது. கொள்கலன்களை ஒரே இரவில் காலி செய்து விடக்கூடாது. இப்படி செய்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது என்கிறது வாஸ்து சாஸ்திரம். நிதி நிலையும் பாதிக்கப்படும். உங்களால் பாத்திரங்களை சுத்தம் செய்ய முடியாவிட்டால், அவற்றை வெளியில் வைக்க வேண்டும், ஆனால் அவற்றை சமையலறையில் விடாதீர்கள்.

சிலருக்கு சமையலறையில் மாத்திரைகள் வைக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் சமையல் அறையில் மருந்துகளை வைத்திருப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதனால் மருந்துகளை சமையலறையில் வைக்கக் கூடாது.

சேதம் அடைந்த மற்றும் உடைந்த பாத்திரங்களை வீட்டின் சமையலறையில் வைக்கக்கூடாது. உடைந்த பொருட்களை பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் வராது என்பது ஐதீகம். செய்யும் வேலைகளிலும் இடையூறுகள் ஏற்படும். மேலும், சப்பாத்தி செய்வதற்கு தேவையான கடாய், பான் போன்றவற்றை சமையலறையில் வைக்கக்கூடாது. அது கண்ணில் படாமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.