Kethara Gowri Viratham: கேதார கெளரி விரத சிறப்புகள்
இவர், மற்றவர்கள் போல அல்லாது, சிவனை மட்டுமே வணங்குவார்.
திருச்சி திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் ஆலய சிவலிங்க சன்னதியின் இடதுபுறத்தில் அமைந்துள்ள, வெளிப் பிரகாரத் தான், மூன்று கால்களுடன் கூடிய
ட்ரெண்டிங் செய்திகள்
பிருங்கி முனிவர் என்பவரின் சிற்பம் உள்ளது. பெரிய சக்தி வாய்ந்த முனிவர் இவர். சென்னை, பரங்கி மலையில் தான், இவர், தவம் செய்ததாகவும்,, பிருங்கி என்பதே நாளடைவில்,பரங்கிமலை என்றானது தகவல் உள்ளது.இங்கிருக்கும் சிவ ஆலயம் மற்றும் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது என்று கூறுகின்றனர்.
"மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயத்தானும் அரனெனத் தொழுமே"
என்கிறது சிவஞானபோதம். முக்தி தரும் சிவபெருமான், அருவம்,அருவுருவம், உருவம் என்கிற மூவகைத் திருமேனிகளில் காட்சி தந்து அருள் பாலிக்கிறார் கயிலாயத்தில் சிவனார் பார்வதி தேவியின் திவ்ய தரிசனத்தைத் தேவர்களும் முனிவர்களும்,ரிஷிகளும் சென்று தரிசித்து ஆசி பெறுகின்றனர்.அவர்களில் தவசீலர் பிருங்கிமுனிவர் முக்கியமானவர்.
ஆனால் இவர்,மற்றவர்கள் போல அல்லாது, சிவனை மட்டுமே வணங்குவார்.இது தேவி பார்வதிக்கு ஒரு நெருடலான விஷயமாக இருக்க,இது பற்றி,சிவ பெருமானிடம் கேட்க,அவர் பிருங்கிக்கு வேறு எந்த பாக்கியமே,வரசித்திகளோ தேவை இல்லை,அவருக்கு தேவை மோட்சம் மட்டுமே, எனவேதான் அவ்வாறு செய்கிறார் என்றார். இந்த பதில் தேவிக்கு திருப்தி அளிக்கவில்லை.
பின்பு, தேவி, தரிசன நேரம் வரும்போது ,சிவனிடம் நெருக்கம் காட்டவும்,அவர் மடியிலமர்ந்தும் இருக்க, முனிவர்,தேனி வண்டு ரூபம் எடுத்து ,இருவர்க்கு இடையே பறந்து சிவனை மட்டுமே வழிபட்டும்,பின்பு ஒரு துளை வழியாக புழு உருவத்தில் துளையிட்டு நுழைந்து வழிபட்டு வர,, சினங் கொண்ட தேவி ,தாம் அவர்க்கு தந்திருந்த சக்தி அனைத்தையும் எடுத்தார்
ரத்தம்,சதை,நரம்பு என்ற அனைத்தையும் இழந்து, வலிவிழந்து, நடக்க முடியாது தடுமாறுகையில், சிவபெருமானார் மனம் இரங்கி, அவர்க்கு 3 வந்து கால் ஒன்றைத் தந்தருள, (சிலர் ஊன்றுகோல் என்பர்)இதைக் கண்ட தேவிக்கு கோபம் வந்தது.
சினங்கொண்ட பார்வதி பூலோகம் வந்தார். 12 ஆண்டுகளாக காய்ந்து, வரண்டதோர் நந்தவனம், இவரது வரவால் மிகவும் துளிர்த்து, பெரியதொரு, பச்சைப்பசேல் தோட்டமாக, அதன், நறுமணத்தை, நன்கு, நுகர்ந்தவாறே , பரவசத்துடன் அங்கு வந்தார் வால்மீகி முனிவர். விபரங்களறிந்த பிறகு,தேவியை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்..
தான், அவசரத்தில் சினம் கொண்டு வந்து விட்டாலும் சிவனை பிரிந்து, இருப்பது இயலாத காரியம் என மனதில் நினைத்து, முனிவரிடம்,அதற்கென்று ஏதாவது தகுந்த உடன் பலனளிக்கக் கூடிய விரதம் உள்ளதா என வினவ, முனிவர் யோசனை செய்து " கேதார் கௌரி விரதம்" எனும் கேதாரீஷ்வரர் நோன்பு பற்றி,அதுவரை அந்த விரதத்தை யாரும் செய்ததில்லை எனவும், அனுஷ்டிப்பவர்க்கு அது அமோக பலன்களை அள்ளித் தரும் எனவும் கூறி,சிரத்தையுடன் அந்த விரதத்தை அனுஷ்டிக்கப் சொல்லி அருளினார்.
அதில் மிகுந்த நம்பிக்கை கொண்டு, 21 நாள் விரதம் அனுஷ்டித்தார் பார்வதி தேவி,21 வது நாள் அன்று, தேவகணங்கள் சூழ, சிவன் பிரதிட்சயமாகி தேவிக்குத் தனது இடப்பக்கத்தையே மகிழ்வுடன் கொடுத்து அர்த்த நாரீஸ்வரராக, சிவ-சக்தியாக,கைலாய மலைக்குச் சென்றனர் என்கிறது புராணங்கள். கேதாரம் என்றால்,வயல் சூழ்ந்த இடம்,நந்தவனம், அங்கு விரதமிருந்ததால் இப் பெயர் என்பர்,சிலர் கேதர்நாத் என்கிற இமயமலைச் சாரல் பகுதி யில் செய்ததாலே, இப்பெயர் என்று சொல்வர்.
ஆண்-பெண் சமம் என்கிற தத்துவ நெறியை போதிக்க சிவனின் திருவிளையாடல் இது எனக் கொள்ளலாம். சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பது நிரூபண மாகியது. சிவ - சக்தியின் வழிபாடே சிறந்தது என உணர்த்திய சம்பவமிது. தெரியாது முனிவர் செய்த செயல் மன்னித்து,மறக்கப் பட்டது.அதனால் ஏற்பட்ட விளைவு கருத்தில் கொள்ளப் பட்டது.
உலகிலேயே மூன்று கால்களை உடைய சித்தரான இந்த முனிவர், தான், செய்த தவறுக்காக பல தலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்போது திருவான்மியூருக்கும் வந்து, சொக்கநாயகி அம்மன் சமேத அமுதீஸ்வரர் ஆலய வழிபாடு செய்கையில், தேவி, முனிவர்க்கு, மீனாட்சி, காமாட்சி, மூகாம்பிகை, என மூன்று வடிவங்களை தன்னில் காட்டி நின்றார். அதன் காரணமாக அவள் திரிபுர சுந்தரி என அழைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள்.ஸ்கந்த புராணத்தில்,சக்தியின் 21 நாட்கள் விரதம் முடிந்த அடுத்த நாளை தீபாவளிக் திருநாளாகக் கொண்டாடப் படுகிறது.
இறைவனை விட்டு இமைப் பொழுதும் நீங்காது இருக்க வேண்டி செய்த விரதமிது. அம்பிகை தவ நிலையில் இருந்து செய்திட்ட சிறப்பு வாய்ந்த விரதம் இது. அர்த்தநாரீஸ்வரரின், படி மக்கலைக் கூற்றினை, அம்சுமத்,பேதா ஆகமம், காமிக்க ஆகமம், சுப்ர பே தாகமும் ஆகியவற்றில் மிக விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கிறது என்பர்.
இவ்விரதம்,நமக்கு,புரட்டாசி மாதம்,சுக்ல பக்ஷ,தசமி திதியில் தொடங்கி,ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷம் அமாவாசையன்று முடியும். 21 நாட்கள் விரதத்துடன், சிரத்தையுடன் அனுசரிக்க வேண்டிய விரதமிது.முதல் நாள்,21 நூல்கள்கெண்டு 21 முடிச்சுகளால் கலசத்தை சுற்றி அமைக்க,இதுவே சிவ-பார்வதி வழிபாட்டு அம்சமாகக் கொண்டு. தினசரி சிவபூஜை செய்தல் வேண்டும் . இதற்கான முழு விபரம்,மந்திர ஸ்லோகம் அடங்கிய புத்தகங்கள் கிடைக்கின்றன.வீட்டில் பெரியோர்களும் விபரம் சொல்வர்.மற்ற பூஜைகள் போல வெற்றிலை பாக்கு பழம்,தூபதீபம்,21 விதமான பலகார/உணவு வகைகள்,, 21வகை காய்/கனிகள், பூ, அனைத்தும் வைத்து சோடோபோசார பூஜை செய்து வழிபட வேண்டும்..
குடும்ப பூஜையாக உள்ள குடும்பங்களில், பூஜைகள் மரபில், சில மாற்றங்கள் உண்டு.இறைவனின் 16 நாமங்களைச் சொல்லி வழிபடும், மிகச் சிறப்பான பூஜையிது.விரத கடைசி நாளில், பெண்கள் இடது கையிலும்,ஆண்கள், தம், வலது கையிலும் ,கயறில் நோன்புச்சரடு கட்டிக் கொள்வார்கள்.அம்மிக் குழவியை நன்கு சுத்தம் செய்து, அலங்கரித்து, பூஜை செய்யும், மரபுமுண்டு. 21. வது நாள் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.. ஐஸ்வர்யம் பெருக,வியாதி அனைத்துமகல,வலிமை, மனத்துணவு உண்டாக, இவ்விரதம் பயன் தருவதாக சொல்வர்..
இவ்வரிய விரதம் வரக் காரணமாக இருந்த, பிரிங்கி முனிவர்,சிலை வடிவில், பல தலங்களில் அருள் பாலிக்கிறார். விழுப் புரம் பக்கம் 7 கிமீ தூரத்தில் திருவாமாத்தூரில், அருள் மிகு முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வர் ஆலய தல விருட்சமாக,வன்னிமரமாக இருப்பது இம் முனிவரே.. இஃது, தேவாரம் பாடல் பெற்ற.53 வது திருத்தலம். குருவின் அம்சத்தில் சந்நதி கொண்டிருக்கும் மணவிளை மகாதேவர் ஆலயத்தில், வண்டு உருவில் முனிவர் வந்து பூஜை செய்தாராம்.பிருங்கி என்றாலே வண்டு எனும் பொருளுண்டு என்பர்.
சென்னைப் போரூர், நந்தம்பாக்கம்,விஜயநகர பேரரசர் காலத்தில்தான் உருவானது எனவும்,அதன் அருகே உள்ள மலையில் , இம்முனிவர் தவம் செய்து வந்ததாகவும், அப்பகுதி "பிருந்தாரண்ய க்ஷேத்ரம்" என அழைக்கப்பட்டதாக தகவலுண்டு.
உமையொரு பாகனாக, அர்த்தநாரியாக,காட்சி தந்திட்டதோர் இடமாக, திருவள்ளூர் மாவட்டம், திருக்கண்டலம் அருகே உள்ள ,திருக்கள்ளில் எனும் சிவதலத்தையும் குறிப்பிடுகிறார்கள்.இங்கு இம்முனிவர்,சிவனாரை , கள்ளி மலர்களால் பூஜித்ததாக வரலாறு. அருள்மிகுதட்சிணாமூர்த்திஅமுத கலசத்தோடு,,ஏடும் கொண்டு,தேவியை அணைத்தபடி,பிருங்கி முனிவருடன் காட்சி தருவதாகக் கூறுவர்.. காளிகாம்பாள் கோவிலின் நடராஜர் சன்னதியில் 3 கால்களுடன் முனிவர் எலும்பும் தோலும் ஆகக் காட்சிதரும் சிலை உள்ளது.
புகழ்பெற்ற, திருச்செங் கோடு,அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திலும் இவ்வுருவம் காணப்படுகிறது.காஞ்சி கைலாஸநாதர் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரரே தென்னிந்தியாவின் மிகப் பழைய வடிவமென்பர். திருச்செங்கோட்டில் மூலவராக இருக்கிறார்.
கேதாரகௌரி விரதத்தை கடைபிடித்தொழுகியதால் திருமால் வைகுந்த பதவி அடைந்தார். பிரம்மா சிருஷ்டி எனும் உயர்பதவி பெற்றார்,இந்திரன் பொன்னுலகையாண்டு வெள்ளை யானை ஐராவதம் வாகனாமாகக் காரணமும் இவ்விரதமே. இவ்வாறு பலப்பல சான்று பட்டியல் உண்டென்பர்.
"நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும்
என்நெஞ்சில் நீங்காதான்
தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி
தன் தாழ் வாழ்க
ஆகமம் ஆகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன்,அநேகன்
இறைவனடி வாழ்க"
-----மாணிக்க வாசகர்----
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார்,சென்னை.
டாபிக்ஸ்