Tamil News  /  Astrology  /  Keep This In Your Purse To Increase Money

Increase Money : பண கஷ்டமா? இனி இதை செய்யுங்கள்.. இந்த 1 பொருளை பர்ஸில் வைத்தால் பணம் பல மடங்கு பெருகுமாம்!

Divya Sekar HT Tamil
Jan 16, 2024 09:33 AM IST

Vastu Tips : பணத்தை ஈர்க்கக்கூடிய பொருட்களை சரியான முறையில் எப்படி பர்ஸில் வைத்தால் பணம் நம்மைத் தேடி வரும் தெரிந்து கொள்வோம்.

இந்த 1 பொருளை பர்ஸில் வைத்தால் பணம் பல மடங்கு பெருகுமாம்
இந்த 1 பொருளை பர்ஸில் வைத்தால் பணம் பல மடங்கு பெருகுமாம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதேபோல பச்சை கற்பூரத்தையும் சொல்வார்கள். பச்சை கற்பூரத்தை வைத்தால் பணம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் பச்சை கற்பூரம், ஏலக்காய் மளிகை பூ என மூன்றையும் பணப்பெட்டியில் வைப்பார்களா.ம் இதை வைத்தால் பணம் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல தான் நம் மணி பர்ஸில் ஒரு ஏலக்காய் வைத்தால் பணம் விரயம் ஆகாமல் பன்மடங்கு பெருங்குமாம்.

தற்போதைய காலகட்டத்தில் மணி பர்ஸ்ஸில் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு, புகைப்படம், கடைகளில் வாங்கிய பில் என இவைகள் தான் பரிசில் அதிகம் காணப்படுகிறது. ஒரு பர்ஸை நாம் அணுகும் போது பயபக்தியுடன் பயன்படுத்த வேண்டும். அதனை அங்கும் இங்கும் வைக்காமல் ஒரே இடத்தில் வைத்து பயபக்தியுடன் அணுக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அதேபோல நீங்கள் பர்ஸில் இந்த ஏலக்காயை வைக்கும் போது அப்படியே வைக்கக் கூடாது. ஏலக்காயை உடைத்து அந்த கருப்பு பருப்பு வெளியே தெரியும் படி வைக்க வேண்டும். பல பேர் இந்த தவறை செய்கிறார்கள். ஏலக்காயை அப்படியே வைத்தால் பலன் கிடைக்காது என்பதல்ல. குறைவான பலனை கிடைக்கும் என்பதுதான். எனவே ஏலக்காயை எங்கு பயன்படுத்தினாலும் உடைத்து பயன்படுத்துங்கள்.

அந்த ஏலக்காயின் வாசனை எவ்வளவுக்கு எவ்வளவு பெருகுகிறதோ அவ்வளவு நன்மை நமக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாம். ஏலக்காயை அப்படியே வைக்க மனம் இல்லாமல் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மஞ்சள் துணியில் ஏலக்காயை வைத்து வைக்கலாம். இப்படி செய்தால் மஞ்சள் மங்களகரமானது ஏலக்காய் பணத்தை பெருக்கக் கூடியது உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன் இருமடங்காக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

துணி வைக்க விரும்பவில்லை என்றால் பேப்பர் வைக்கலாம். பேப்பர் என்றால் நீங்கள் நகை கடையில் நகை வாங்கும் போது பிங்க் நிறத்தில் ஒரு பேப்பர் கட்டிக் கொடுப்பார்கள். அதேபோல மஞ்சள் நிறத்திலும் பேப்பர் இருக்கிறது. அந்த மஞ்சள் நிற பேப்பரில் ஏலக்காயை சுற்றி நீங்கள் பர்ஸில் வைக்கலாம். இந்த மணமானது மகாலட்சுமிக்கும் குபேரனுக்கும் மிகவும் பிடிக்குமா. இந்த மனம் எங்கு உள்ளதோ அவர்கள் இருவரும் அங்கு வசிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் நமக்கு பணம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது.

நன்றி : AisHutte

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்