தமிழ் செய்திகள்  /  Astrology  /  Karpaga Viruksham Vahanasevai Held At Tirumala Tirupathi Brahmotsavam Fourth Day

Tirumala brahmotsavam: நான்காம் நாளில் மழைக்கு இடையே கற்பக விருட்சக வாகன சேவை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 30, 2022 11:54 PM IST

திருமலா திருப்பதி பிரம்மோத்சவம் விழாவின் நான்காவது நாளான இன்று மலையப்பர் சுவாமி கற்பக விருட்சக வாகனத்தில் உலா வந்தார் அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் நான்காவது நாளி்ல கோலாகலமாக நடைபெற்று கற்பக விருட்சக வாகன சேவை
திருப்பதி ஏழுமலையான் கோயில் நான்காவது நாளி்ல கோலாகலமாக நடைபெற்று கற்பக விருட்சக வாகன சேவை

ட்ரெண்டிங் செய்திகள்

சாகாத தன்மையை அளிக்கும் அமிர்தத்தை பெற பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள்.

அதற்கு தேவர்கள் மட்டும் போதாது என்பதால் கிடைக்கும் அமிர்தத்தில் அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாக கூறி அவர்களையும் அழைத்தார்கள்.

இதையடுத்து வாசுகி பாம்பின் ஒரு புறத்தை தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள். மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார்.

தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தைனை தானே உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விஷம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விஷம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது.

அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். அப்போது பாற்கடலில் இருந்து அமிர்தம், அட்சய பாத்திரம், இந்திரன் இருக்கும் வெள்ளை யானை ஐராவதம், கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு அபூர்வ திரவியங்கள் தோன்றின.

இதில் கற்பக விருட்சம் என்பது யார் எதை வேண்டினாலும் அவர்களுக்கு அதை கொடுக்கும் தன்மை உடையதாக கருதப்பட்டது. அத்தகைய தன்மை உள்ள கற்பக விருட்சத்தை வாகனமாக கொண்டு வேண்டியோருக்கு வேண்டியதை வழங்கும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோயில் மாட வீதியில் எழுந்தருளினார்.

திருப்பதியில் இன்று லேசாக மழை பொய்தபோதிலும், அந்த கொட்டும் மழையில் பக்தர்களின் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள், திவ்ய பிரபந்த காலம், நான்மறை வேத கோஷம் ஆகியவற்றிற்கு இடையே கற்பகவிருஷ வாகன சேவை கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து தரிசித்தனர்.

WhatsApp channel