’கன்னி ராசிக்கு செம்ம அடி கொடுக்க போகும் சனி! எச்சரிக்கையா இருங்க!’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’கன்னி ராசிக்கு செம்ம அடி கொடுக்க போகும் சனி! எச்சரிக்கையா இருங்க!’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025

’கன்னி ராசிக்கு செம்ம அடி கொடுக்க போகும் சனி! எச்சரிக்கையா இருங்க!’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025

Kathiravan V HT Tamil
Nov 07, 2024 07:31 PM IST

உங்கள் சுயஜாதகத்தில் வலுவான தசை மற்றும் தசாபுத்தி நடந்தால் நன்மைகள் உண்டாகும். ராசிக்கு 9ஆம் வீட்டில் உள்ள குரு பகவான் ராசியை பார்ப்பதால் நன்மைகள் கிடைக்கும். திருமணத் தடை விலகும், படிப்பு, வேலை சிறப்பு அடையும்.

’கன்னி ராசிக்கு செம்ம அடி கொடுக்க போகும் சனி! எச்சரிக்கையா இருங்க!’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025
’கன்னி ராசிக்கு செம்ம அடி கொடுக்க போகும் சனி! எச்சரிக்கையா இருங்க!’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025

கன்னி ராசியும் சனி பகவானும்!

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். கன்னி ராசிக்கு 6ஆம் வீட்டில் உள்ள சனி பகவான் 7ஆம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். கடன், நோய், எதிரிகளை 6ஆம் வீடு குறிக்கின்றது. திருமண வாழ்கை, தொழில் கூட்டாளிகளை 7ஆம் வீடு குறிக்கின்றது. 7ஆம் இடத்து சனி 7ஆம் பார்வையாக ராசியை பார்ப்பது அவ்வளவு நல்லது அல்ல. எதிர்மறையான எண்ணங்கள், செயல் மற்றும் சொற்களில் தடுமாற்றம் ஆகியவை உண்டாகும். சோம்பேறித்தனம் அதிகம் ஆகும். 

சனி பகவானால் உண்டாகும் பிரச்னைகள் 

குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சை குறைப்பதன் மூலம் பிரச்னைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் உறவுகள் வலுப்படும். நீண்டகாலமாக நினைத்துக் கொண்டிருந்த ஆசைகள் நிறைவேறும். சேர வேண்டிய பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். 

குரு கொடுக்கும் நன்மை 

உங்கள் சுயஜாதகத்தில் வலுவான தசை மற்றும் தசாபுத்தி நடந்தால் நன்மைகள் உண்டாகும். ராசிக்கு 9ஆம் வீட்டில் உள்ள குரு பகவான் ராசியை பார்ப்பதால் நன்மைகள் கிடைக்கும். திருமணத் தடை விலகும், படிப்பு, வேலை சிறப்பு அடையும்.

ராகு உடன் சனி சேர்க்கை நடைபெறுவதால் நட்பு உள்ளிட்ட விவகாரங்களில் கவனமாக இருப்பது அவசியம். ராசியில் உள்ள கேது உடல் ஆரோக்கியம் சார்ந்த உபாதைகளை உண்டாக்குவார் என்பதால் எச்சரிக்கை தேவை. சனி பகவான் 3ஆம் பார்வையாக 9ஆம் இடத்தை பார்ப்பதால் தந்தையை விட்டு பிரிந்து தூர தேசம் செல்லலாம். சனி பகவான் 10ஆம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் வீடு, நிலம், வாகனம் சார்ந்த ஆவணங்களில் சிக்கல்கள் வரலாம்.

வழிபாடும் பரிகாரமும்!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து, நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரிப்பதன் மூலமும், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கையில் உண்டாகும் பிரச்னைகள் நீங்கும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner