மறைந்து போன அக்னி பகவான்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட அக்னீஸ்வரர்.. மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மறைந்து போன அக்னி பகவான்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட அக்னீஸ்வரர்.. மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள்

மறைந்து போன அக்னி பகவான்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட அக்னீஸ்வரர்.. மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 17, 2024 06:00 AM IST

Agneeswarar: எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.

மறைந்து போன அக்னி பகவான்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட அக்னீஸ்வரர்.. மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள்
மறைந்து போன அக்னி பகவான்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. கோயில் கொண்ட அக்னீஸ்வரர்.. மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள்

இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத கம்பீர வரலாற்றுச் சரித்திர குறியீடாக அந்த கோயில்கள் இருந்து வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நின்று வருகின்றன.

உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தனிப்பெரும் பக்தர்கள் இவருக்கென இருக்கின்றனர். தென்னிந்திய பகுதிகளில் சிவபெருமானுக்கு வானம் முட்டும் அளவிற்கு பிரம்மாண்ட கோயில்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட கோயில்கள்தான் இன்று வரை தொல்லியல் துறையின் சான்றாக திகழ்ந்து வருகிறது.

கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வந்துள்ளார். இன்று வரை மன்னர்களின் கலைநயத்தையும் சிவபெருமான் மீது கொண்டுள்ள பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் எத்தனையோ பிரம்மாண்ட கோயில்கள் காணப்படுகின்றன. சோழ சாம்ராஜ்யத்தில் ராஜனுக்கெல்லாம் ராஜனாக திகழ்ந்து வந்த ராஜ ராஜ சோழன் கட்டி வைத்துச் சென்றுள்ள தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் அதற்கு மிகப்பெரிய சான்றாக திகழ்ந்து வருகிறது.

ஒருபுறம் பாண்டிய மன்னர்கள் தங்களது கலை நயம் மற்றும் சிவபக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அதற்கு மதுரையில் இருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கோயில் மிகப்பெரிய சான்றாகும். ஒருபுறம் பல்லவ மன்னர்களும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பல கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

இதுபோல எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இது ஒரு கற்கோயில் ஆகும். நான்கு சுகர்கள் கொண்ட கர்ப்பகிரகம் இங்கு அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தெற்கு முகமாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இருப்பினும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டாலும் கர்ப்ப கிரகத்திற்கு மேலே விமானம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

இந்த கோயிலில் பிரம்மதேவர், தட்சிணாமூர்த்தி சிலைகளும் காணப்படுகின்றன. இந்த திருக்கோயிலில் வழிபட்டால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

ஒருமுறை வருண பகவான், வாயு பகவான் மற்றும் அக்னி பகவான் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தினால் அக்கினி பகவான் அந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டார்.

இதனால் அனைத்து லோகங்களும் இருண்டு போய்விட்டன. உலகத்தில் நடத்தப்பட்ட யாகம் உள்பட அனைத்தும் அணைந்து விட்டன. இதனால் யாகம் நடத்தி வழிபட்டு வந்த முனிவர்கள் மற்றும் தேவர்கள் அனைவரும் பெரிய அவதிக்கு உள்ளாகினர்.

உடனே இதிலிருந்து விடுதலை பெறுவதற்காக சிவலிங்க பூஜை செய்தனர். பூஜையில் மனமகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி அக்னி பகவானை அந்த இடத்திற்கு அழைத்தார். அந்த இடத்தில் அக்னி பகவான் தனது சுய ரூபத்தோடு மிகவும் கோபமாக காட்சி கொடுத்தார்.

அதன் பின்னர் சிவபெருமானின் தரிசனத்தை காண்பதற்காகவே வருணன் வாயு ஆகியோர் வாக்குவாதம் செய்வது போல நாடகம் ஆடுவதாக அக்னி பகவான் தெரிவித்தார். அதன் பின்னர் சிவபெருமான் காட்சி கொடுத்த இடத்திலேயே ஒரு லிங்கத்தை வைத்து அக்னி பகவான் பூஜை செய்தார். அதன் காரணமாகவே இங்கு காட்சி கொடுத்து சிவபெருமானுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம் வழங்கப்பட்டது.

Whats_app_banner