Kadagam Rasi Palan: ‘இரவில் வாகனம் ஓட்டும் போது கவனம்.. அலுவலகத்தில் வாக்குவாதம் வர வாய்ப்பு’ - கடகம் ராசி பலன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kadagam Rasi Palan: ‘இரவில் வாகனம் ஓட்டும் போது கவனம்.. அலுவலகத்தில் வாக்குவாதம் வர வாய்ப்பு’ - கடகம் ராசி பலன்!

Kadagam Rasi Palan: ‘இரவில் வாகனம் ஓட்டும் போது கவனம்.. அலுவலகத்தில் வாக்குவாதம் வர வாய்ப்பு’ - கடகம் ராசி பலன்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 29, 2024 07:21 AM IST

Kadagam Rasi Palan: அலுவலகத்தில் சிறிய பிரச்சினைகள், ஈகோ வடிவில் வரலாம். ஆனால், அதனை நீங்கள் சமாளிப்பீர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு செல்வத்தைக் கையாளுவதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். - கடகம் ராசி பலன்!

Kadagam Rasi Palan: ‘இரவில் வாகனம் ஓட்டும் போது கவனம்.. அலுவலகத்தில்  வாக்குவாதம் வர வாய்ப்பு’ - கடகம் ராசி பலன்!
Kadagam Rasi Palan: ‘இரவில் வாகனம் ஓட்டும் போது கவனம்.. அலுவலகத்தில் வாக்குவாதம் வர வாய்ப்பு’ - கடகம் ராசி பலன்!

கடகம் காதல் ஜாதகம் இன்று

கடந்த கால பிரச்சினைகளை தீர்த்து, காதலனுடன் அதிக நேரம் செலவிடுங்கள். உங்கள் துணை ஆதரவாக இருப்பார். மேலும், நீங்கள் இருவரும் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதில், வெற்றி பெறுவீர்கள். நெடு நாளாய் நீண்டு வரும் காதல் விவகாரங்களுக்கு, வெளிப்படையான பேச்சு மிகவும் முக்கியம் ஆகும். 

உங்கள் காதல் விவகாரத்தில், மூன்றாம் தரப்பு தலையீடுகள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். திருமண நிச்சயம் செய்து கொண்டவர்கள், தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். 

திருமணமான கடக ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையுடன் தங்கள் கடந்த கால உறவுகளைப் பற்றி விவாதிக்கும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம் தொழில் ஜாதகம் இன்று

உங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்கள் இருக்கும். மேலும் நீங்கள் வளர்வதற்கான வாய்ப்புகளை காண்பீர்கள். சில தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளைக் காண்பார்கள். 

குழு கூட்டங்களில், கருத்துக்களை கூறும்போது, கவனமாக இருங்கள். ஒரு சக ஊழியர் உங்கள் ஆலோசனைகளுக்கு ஆட்சேபனை எழுப்பலாம். இதற்கு அலுவலக அரசியல் ஒரு காரணமாக இருக்கலாம். தேர்வு எழுதுபவர்கள், குறிப்பாக மாணவர்கள், தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

கடகம் பணம் ஜாதகம் இன்று

செல்வம் இன்று வரும். ஆனால், நீங்கள் ஆடம்பரத்திற்காக செலவு செய்வதைக் கருத்தில் கொள்ளலாம். புதிய வீடு அல்லது வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க ஏற்ற நாளாக இருக்கிறது. குடும்பத்திற்குள் ஒரு கொண்டாட்டமும் இருக்கும். 

அங்கு நீங்கள் ஒரு நல்ல தொகையை பங்களிக்க வேண்டும். வரும் நாட்களில், நல்ல வருமானத்தை தரும் பங்கு மற்றும் ஊக வணிகத்தில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த நிதி கிடைக்கும்.

கடகம் ஆரோக்கிய ஜாதகம் இன்று

உங்கள் ஆரோக்கியத்தில் சிறிய சிக்கல்கள் ஏற்படலாம் உணவில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது நல்லது. எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம். 

இன்று இரவில் தாமதமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். உங்களிடம், முதலுதவி கிட் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடகம் பண்புகள்

  • வலிமை: உள்ளுணர்வு, நடைமுறை, கனிவு , கலை, அர்ப்பணிப்பு, இரக்கமுள்ள, அக்கறை
  • பலவீனம்: திருப்தியற்றத்தன்மை, விவேகம்
  • சின்னம்: நண்டு
  • உறுப்பு: நீர்
  • உடல் பகுதி: வயிறு மற்றும் மார்பகம்
  • அடையாளம் ஆட்சியாளர்: சந்திரன்
  • அதிர்ஷ்ட நாள்: திங்கள்
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
  • அதிர்ஷ்ட எண்: 2
  • அதிர்ஷ்ட கல்: முத்து

இணக்க விளக்கப்படம் 

  • இயற்கை நாட்டம்: ரிஷபம், கன்னி, விருச்சிகம், மீனம்
  • நல்ல இணக்கம்: கடகம், மகரம்
  • நியாயமான இணக்கம்: மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம்
  • குறைவான இணக்கத்தன்மை: மேஷம், துலாம்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்