தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kaakala Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 16 பேறுகளை தேடி கொடுக்கும் காகல யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Kaakala yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 16 பேறுகளை தேடி கொடுக்கும் காகல யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Kathiravan V HT Tamil
Jun 23, 2024 06:00 AM IST

Kaakala yogam: லக்னாதிபதி, 4ஆம் அதிபதி, 9ஆம் அதிபதி ஆகிய மூன்று கிரகங்கள் காகல யோகத்திற்கு தொடர்புடைய கிரகங்களாக அமைகின்றன. இந்த மூன்று கிரகங்களும், தங்களுக்குள் கேந்திரமாக அமைந்து, அதில் யாரேனும் ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருக்கும் போது காகல யோகம் உண்டாகின்றது.

Kaakala yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 16 பேறுகளை தேடி கொடுக்கும் காகல யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
Kaakala yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 16 பேறுகளை தேடி கொடுக்கும் காகல யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.

காகல யோகம் எப்படி உண்டாகின்றது?

லக்னாதிபதி, 4ஆம் அதிபதி, 9ஆம் அதிபதி ஆகிய மூன்று கிரகங்கள் காகல யோகத்திற்கு தொடர்புடைய கிரகங்களாக அமைகின்றன. இந்த மூன்று கிரகங்களும், தங்களுக்குள் கேந்திரமாக அமைந்து, அதில் யாரேனும் ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருக்கும் போது காகல யோகம் உண்டாகின்றது. 

ஒரு கிரகம் ஆட்சியோ அல்லது உச்சமோ பெறுவது அவசியம்

இந்த மூன்று கிரகங்களும் ஒரே வீட்டில் இருப்பது, ஒரு கிரகம் ஒரு வீட்டிலும், மீதமுள்ள 2 கிரகங்களும் 4, 7, 10 ஆகிய இடங்களில் ஏதேனும் இரண்டு இடத்தில் இருப்பது, அல்லது மூவரும் 4, 7, 10 ஆகிய இடங்களில் இருப்பது காகல யோகம் உண்டாக காரணமாக அமைகிறது. அதே வேளையில் இந்த மூன்று கிரகங்களில் யாரேனும் ஒருவர் ஆட்சியோ, அல்லது உச்சமோ பெற்று இருப்பது அவசியம் ஆகும்.  

உதாரணமாக, மேஷ லக்னத்தை எடுத்துக் கொள்வோம், மேஷ லக்னத்தின் லக்னாதிபதி செவ்வாய், 4ஆம் அதிபதி சந்திரன், 9ஆம் அதிபதி குரு ஆகும். 

4ஆம் இடத்தில் சந்திரன் ஆட்சி பெற்று, அங்கே குருவும், லக்னத்தில் செவ்வாயும் இருந்தால் காகல யோகம் உண்டாகின்றது. 

9ஆம் இடத்தில் குரு ஆட்சி பெற்று அங்கேயே சந்திரன் இருந்து, மீனத்தில் செவ்வாய் இருந்தாலும் காகல யோகம் உண்டாகின்றது. 

காகல யோகத்தின் பலன்கள் 

இந்த யோகம் மூலம் ஜாதகருக்கு பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், தொழில் விருத்தி, முன்னேற்றம், சமுதாய தலைமை பொறுப்பு ஏற்பது, வளர்ச்சி பாதையில் பயணிப்பது, தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் வளர்ப்பது, அதிகாரம் மிக்க சபைகளுக்கு தலைவர் ஆவது, கூட்டத்தை கட்டமைத்து வழிநடத்தி செல்வது, நேர்வழியில் நடப்பது, ஆலயங்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, நல்ல குழந்தை பேறு பெறுவது உள்ளிட்ட 16 சம்பத்துகளையும் காகல யோகம் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். சகல விதத்திலும் தலை வணங்கி மதிக்கத்தக்க மனிதராக வாழும் நிலையை இந்த யோகம் ஏற்படுத்தி தரும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v