கொட்டி கொடுக்க வரும் குரு.. அதிர்ஷ்டத்தை அள்ளிகொள்ளப்போகும் மூன்று ராசிகள் - 2025இல் எல்லாம் யோகம் தான்
Jupiter Transit: 2025ஆம் ஆண்டில் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்து கொட்டி கொடுக்க வருகிறார் குரு பகவான். இதன் விளைவாக எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அள்ளிகொள்ளப்போகும் மூன்று ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.
2025 மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதையடுத்து புதனின் சொந்த ராசியான மிதுனத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். குருவின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிகளையும் குறிப்பிடத் தகுந்த தாக்கம் ஏற்பட்டாலும், 3 ராசிகள் நல்ல பலன்களை பெறுவார்கள். எதிர்பாராத யோகத்தை இந்த ராசியினர் பெறுவார்கள். அத்துடன் செல்வ செழிப்பு, குழந்தைகள் மற்றும் திருமணத்தை யோகம் பெறுவார்கள்.
குரு பெயர்ச்சி
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்துக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகிறார்.
தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு பகவான் வரும் 2025ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
மே 3 ஆம் தேதி,மேஷ ராசியலிருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு நகர்கிறார். ஆண்டு முழுவதும் ஒரே ராசியில் தங்குவதற்குப் பதிலாக 2025 இல் தனது நிலையை மாற்றும்.
புதனின் சொந்த ராசியான மிதுனத்தில் குருவின் சஞ்சாரம் யாருக்கெல்லாம் நல்ல பலன்களை தரும் என்பதை பார்க்கலாம்
மேஷம்
மேஷ ராசிக்கு 2025ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசியின் 3வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். அனைத்து செலவுகளும் குறையும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
நண்பர்களின் உதவியைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.
மிதுனம்
குரு பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். அது உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உங்கள் மீது மற்றவர்களின் மரியாதை அதிகரிக்கும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உயர் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வுகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் குறையும். நிலுவையில் உள்ள பணம் உங்களுக்குக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் ஆதரவளிப்பார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்
டாபிக்ஸ்