தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru And Venus Conjunction: குரு மற்றும் சுக்கிரன் இணைவு.. அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள்

Guru and Venus Conjunction: குரு மற்றும் சுக்கிரன் இணைவு.. அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Apr 06, 2024 07:09 PM IST

Jupiter and Venus: குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

குரு மற்றும் சுக்கிரன்
குரு மற்றும் சுக்கிரன்

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் சஞ்சரித்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை தனது நிலையை மாற்றிக் கொள்வார். மே 1ஆம் தேதி ரிஷப ராசியில் தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். குருவின் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் மிகவும் ஆடம்பரமானவர். அவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது நிலையை மாற்றுகிறார். அவரது இடமாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது.

சுக்கிர பகவான், ஏப்ரல் 24அன்று மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் சுக்கிர பகவானும், குரு பகவானும் ஒன்றாக இருப்பார்கள். சுக்கிர பகவான் மற்றும் குரு பகவானின் சேர்க்கையானது, அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கக்கூடும் என்றாலும், சில ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். அப்படி அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மேஷம்: குரு பகவானும், சுக்கிர பகவானும் சேர்ந்து மேஷ ராசியில் நல்ல பலன்களைத் தருவார்கள். வாழ்க்கையில் வெற்றிகள் அடையவும், வியாபாரத்தில் முன்னேற்றம் பெறவும் குருவும் சுக்கிரனும் வழிவகுக்கின்றனர். இத்தனை நாட்களாக சரியான வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் மேஷ ராசியினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிதி விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் வரும். கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறையும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஒத்தி வீடு அல்லது போகியத்துக்கு குடியேறுவார்கள். 

ரிஷபம்: குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தரப் போகிறார்கள். ரிஷப ராசியினர் நல்ல அதிர்ஷ்டத்தையும் முழு ஆதரவையும் பெறப் போகிறீர்கல். பணம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வங்கிக் கணக்கில் சேமிப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். அயல்நாடு சென்று கல்வி கற்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

கடகம்: குருவும் சுக்கிரனும் சேர்வதால், கடக ராசியினருக்கு வாழ்க்கையில் லாபம், மகிழ்ச்சி, ஆடம்பரம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே சுமூக சூழ்நிலை நிலவும். வெகுநாட்களாகப் பிரிந்து சென்று பேசாமல் இருப்பவர்கள், இனிமேல் பேச ஆரம்பிப்பார்கள். இத்தனை நாட்களாக கெட்டபெயர் வந்து இருக்கலாம். அது இனிமேல் மறைந்து நல்ல பெயர் உண்டாகும். 

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்