’உங்கள் கடன், நோய், எதிர்களை சொல்லும் 6 ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’உங்கள் கடன், நோய், எதிர்களை சொல்லும் 6 ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!

’உங்கள் கடன், நோய், எதிர்களை சொல்லும் 6 ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!

Kathiravan V HT Tamil
Dec 16, 2024 06:30 AM IST

கடன், நோய், எதிரி, போட்டி, பொறாமை, வம்பு, வழக்கு, வில்லங்கம், விபத்து, கண்டம், அவமானம், சிக்கல், அஜீரண கோளாறு, வயிற்று உபாதைகள், எதிர்களால் தன நாசம் ஆகிய பிரச்னைகளை 6ஆம் இடம் கொடுக்கும்.

’உங்கள் கடன், நோய், எதிர்களை சொல்லும் 6 ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!
’உங்கள் கடன், நோய், எதிர்களை சொல்லும் 6 ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!

பிரச்னைகளை தரும் 6ஆம் இடம் 

கடன், நோய், எதிரி, போட்டி, பொறாமை, வம்பு, வழக்கு, வில்லங்கம், விபத்து, கண்டம், அவமானம், சிக்கல், அஜீரண கோளாறு, வயிற்று உபாதைகள், எதிர்களால் தன நாசம் ஆகிய பிரச்னைகளை 6ஆம் இடம் கொடுக்கும். அதே போல் அரசு வேலை, உத்யோகம், வெளிநாடு வாய்ப்புகளையும் 6ஆம் இடம் குறிக்கின்றது. போட்டி, எதிரி ஆகியவற்றை குறிப்பதால் உபஜெய ஸ்தானங்களில் ஒன்றாகவும் 6ஆம் இடம் உள்ளது. 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பாக்கிய ஸ்தானமாகவும், 2ஆம் இடமான தன ஸ்தானத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் 6ஆம் இடம் வருகின்றது. ஒரு மனிதன் கடன் வாங்கி முன்னுக்கு வருவாரா அல்லது பிரச்னையில் சிக்குவாரா என்பதை 6ஆம் இடமே தீர்மானிக்கின்றது. 

கிரகங்களும் 6ஆம் இடமும்!

6ஆம் இடத்தில் சூரியன் அமர்ந்தால் எதிரியை வெல்லும் பராக்கிரமம் கிடைக்கும். அதே நேரம் பித்தம் உள்ளிட்ட நோய் உண்டாகும். சந்திரன் இருந்தால் நோய் பாதிப்புகள் உண்டாகும். விபத்து மற்றும் கண்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. செவ்வாய் இருந்தால் எதிரிகளை வெல்வீர்கள். அதே போல் தேவையற்ற பிரச்னைகள், ரத்த பாதிப்புகள் உண்டாகும். புதன் இருந்தால் வாக்குவாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பீர்கள். புத்திசாலிதனத்தால் எதிரிகளை வெல்வீர்கள். 

குரு பகவான் 6ஆம் இடத்தில் இருப்பது சிறப்பு கிடையாது. எதிரிகளால் சிரமம் ஏற்படலாம். கௌரவ கடன்கள் உண்டாகும். சுக்கிர பகவான் 6ஆம் இடத்தில் இருந்தால் ஆடம்பர செலவுகளை செய்ய கடன் வாங்கும் நிலை உண்டாகும். 

சனி பகவான் 6ஆம் இடத்தில் இருந்தால் கடன், எதிரி, நோய் இல்லாத நிலை உண்டாகும். இருப்பினும் சில மன சஞ்சலங்கள் வந்து போகும்.

6ஆம் இடத்தில் ராகு இருப்பது மகாலட்சுமி யோகத்தை உண்டாக்கும். இருப்பினும் எதிர்கள் உருவாகி கொண்டே இருப்பார்கள். இருப்பினும் சுபரின் தொடர்பு ராகுவுக்கு ஏற்பட்டால் வருமானம் விரிவாகும். 

6ஆம் இடத்தில் கேது இருப்பது நன்மைகள் உண்டாகும். கடன், நோய், எதிரிகள் இல்லாத நிலை உண்டாகும். சுபர் தொடர்பு உண்டானால் சுபபலன்கள் உண்டாகும். 

பொறுப்புதுறப்பு

இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. நிபுணர்களின் ஆலோசனையின்படி மட்டுமே இந்த தகவலை வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன், சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் ஆலோசனையை கண்டிப்பாகப் பெறுவது நல்லது.

Whats_app_banner