’உங்கள் முயற்சிகளை சாத்தியமாக்கும் உபஜெய ஸ்தானம்!’ 3ஆம் இட ரகசியங்கள்! ஜோதிடம் அறிவோம் தொடர்!
ஒருவரது தைரியம் மற்றும் வீரியத்தை குறிப்பிடும் இடமாக இது உள்ளது. இயல், இசை, நாடகம், நடிப்பு ஆகிய கலைகளில் சாதிப்பதை இது குறிப்பிடுகிறது. வீரதீர சாகசங்களையும் மூன்றாம் இடம் குறிக்கின்றது.
ஜோதிடத்தில் 3ஆம் இடம் என்பது சிறு மறைவு ஸ்தானமாக வகைப்படுத்தப்படுகின்றது. 3, 6, 8, 12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்களாக ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. 3ஆம் இடம் என்பது உபஜெய ஸ்தானங்களில் முக்கிய பங்கு ஆற்றுகின்றது. தைரியம், வீரியம், செயல்திறன், புகழ், விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம், சிறுதூரபயணம், நண்பர்கள், சகோதரர்கள், காதுகள், கைகள், கைகளை கொண்டு செய்யப்படும் வேலைகள், பாத்திரங்களுக்கு உரிய பலன்களை 3ஆம் இடம் தருகின்றது.
தைரிய வீரியத்தை கொடுக்கும் 3ஆம் இடம்
ஒருவரது தைரியம் மற்றும் வீரியத்தை குறிப்பிடும் இடமாக இது உள்ளது. இயல், இசை, நாடகம், நடிப்பு ஆகிய கலைகளில் சாதிப்பதை இது குறிப்பிடுகிறது. வீரதீர சாகசங்களையும் மூன்றாம் இடம் குறிக்கின்றது.
மூன்றாம் இடத்தின் மூலம் சகோதர உறவுகள், நண்பர்கள், நாம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள், ஒப்பந்தங்கள், சிறு பயணத்தால் உண்டாகும் ஆதாயங்களை அறியலாம். 3ஆம் இடத்திற்கு பொறுப்பு வகிக்கும் கிரகமாக செவ்வாய் பகவான் உள்ளார்.
பாவக்கோள்கள் - சுபக்கோள்களின் நிலை
3ஆம் இடங்களில் பாவக்கோள்கள் இருப்பது சிறப்புகளை தரும். சுபக்கோள்கள் இருப்பது புகழை தரும். சில நிலைகளில் சுபக் கோள்கள் அதிக வலுப்பெரும் போது முயற்சி குன்றிய தன்மையை ஜாதகர் பெறுவார். ஒரு வீட்டை கிரகம் பார்ப்பதற்கும், இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
மூன்றாம் அதிபதி தொடர்பு
லக்னத்தோடு 3ஆம் அதிபதி தொடர்பு இருந்தால் எப்போதும் ஜாதகர் ஒரு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார். முயற்சி மூலம் வெற்றிகளை பெறுவார்கள். இரண்டாம் இடமான தன ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளும் போது நண்பர்கள் குறைவாக இருப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.