தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நீங்க பிறந்த தேதி என்ன?.. புதன் என்ன செய்யப் போகிறார்?.. லாபமா சிக்கலா.. வாங்க பார்க்கலாம்

நீங்க பிறந்த தேதி என்ன?.. புதன் என்ன செய்யப் போகிறார்?.. லாபமா சிக்கலா.. வாங்க பார்க்கலாம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 18, 2024 02:39 PM IST

ஒருவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளையும் எண் கணித முறைப்படி எதிர்காலத்தை கணிக்க முடியும் என கூறப்படுகிறது. அது வகையில் புதன் பகவானின் ஆசிர்வாதத்தால் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அது எந்தெந்த தேதிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிறந்த தேதி
பிறந்த தேதி

நமது வாழ்க்கையில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எண்களை மையமாக வைத்தேன் ஜோதிட சாஸ்திரம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் எண் கணித முறையில் இருந்து வருகிறது. தற்போது எண் கணித முறையானது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

ஒருவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளையும் எண் கணித முறைப்படி எதிர்காலத்தை கணிக்க முடியும் என கூறப்படுகிறது. அது வகையில் புதன் பகவானின் ஆசிர்வாதத்தால் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. அது எந்தெந்த தேதிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

எண் 1

 

அதாவது 1, 10, 19, 28 இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண்ணாக ஒன்று விளங்கி வருகிறது இவர்கள் வேலை தொடர்பான சிக்கல்களை சந்திப்பார்கள் வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் வருமானத்தில் செலவுகள் அதிகரிக்கக்கூடும் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது கடின உழைப்பு உங்களுக்கு அவ்வப்போது நல்ல பலன்களை பெற்றுத் தரும் நிதி நிலைமையில் எந்த குறையும் இருக்காது தேவைக்கு அதிகமாக செலவு செய்வது தவிர்ப்பது நல்லது.

எண் 2

 

மாதங்களில் 2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண்ணாக இரண்டு விளங்கி வருகின்றது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிந்தனை மற்றும் கவலை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். கடினமான வேலையாக இருந்தாலும் உழைத்தால் முன்னேற்றம் கிடைக்கும். எல்லா வேலைகளிலும் திட்டமிட்டபடி செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படும். வாழ்க்கை துணையோடு சண்டைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

எண் 3

 

பதிவு உயர்வு வேலை செய்யும் இடத்தில் சிக்கல் உள்ளிட்டவைகளை 20, 21, 12, 3 உள்ளிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் அனுபவிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். குறுக்கு வழிகளை எப்போதும் பின்பற்றாமல் இருப்பது நல்லது. நேரான பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். மிகவும் கவனமாகவும் இருப்பது நல்லது வருமானம் அதிகரிக்கப்படும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மறுக்க முடியாத பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel