Ayilyam Star: கடக ராசி ஆயில்ய நட்சத்திரப்பெண்ணுக்கும் மாமியாருக்கும் ஆகாதா? - ஆயில்ய நட்சத்திரக்காரரின் பலன்கள் இதோ!
Ayilyam Star: கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது குணநலன்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
கடக ராசி, ஆயில்ய நட்சத்திரக்காரருக்கு இருக்கும் ஆளுமைப் பண்பு மற்றும் சாமர்த்திய அறிவு, அவரை உச்சஸ்தானத்தில் கொண்டுபோய் வைக்கும்.
உங்களது சுதந்திரத்தில் யாரும் தலையிடுவதை விரும்பமாட்டீர்கள். எனவே, உங்களுடன் எதிர்வாதம் புரிபவர்கள் ஒன்று தோற்றுப்போவார்கள். இல்லையெல், என்றால் அவர்களது உறவே வேண்டாம் என்று ஒதுக்குவீர்கள். எப்போதும் நண்பர்களுக்கு உதவத்தயாராக இருப்பீர்கள். உங்களது கோபத்தால்,சில எதிரிகளைச் சம்பாதிப்பீர்கள். எனவே, பொறுமை காப்பது நல்லது.
பொதுவாக எல்லோருடனும் எளிதில் நண்பர்கள் ஆகும் குணம் படைத்தவர்களாக இருப்பீர்கள். அதேநேரம், யாரையும் நம்பி, உங்களது ரகசியங்களைச் சொல்லமாட்டீர்கள். அதனால், உங்களை ஏமாற்றுவது எதிரிகளுக்குப் பின்னடைவாக இருக்கும்.
விரும்பிய உணவுகளை நின்று நிதானமாக ரசித்து ருசிக்கும் பழக்கம் கொண்டிருப்பீர்கள். யார் என்ன சொன்னாலும் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு எழமாட்டீர்கள். ஆரோக்கியமற்ற உணவிடம் மட்டும் சற்று தள்ளியிருங்கள்.
எதையும் யாருக்கும் தெரியாமல் சஸ்பென்ஸாக செய்வதில் ஆர்வமுடன் இருப்பீர்கள். கடின உழைப்பினை அதிகம் நம்பி, பின் தெளிந்து ஸ்மார்ட் வொர்க் செய்ய கற்றுக்கொள்வீர்கள். உங்களிடம் எதிரியே 500 பேரை படை திரட்டி வந்து பேசினாலும், சாதுர்யமாகப் பேசி, அவர்களை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிடுவீர்கள். இதனால், அரசியலில் இருக்கும் கடக ராசி ஆயில்ய நட்சத்திரக்காரருக்கு பிரகாஷமான எதிர்காலம் உண்டு.
ஒருவரைப் பற்றிய உங்களது கணிப்பு ஏறக்குறைய மிகச்சரியாக இருக்கும். அந்தளவு ஒருவரின் நுணுக்கமான செயல்பாடுகளை மனதில் இருத்தி வைத்து அசைபோட்டு, கணிப்பீர்கள். அவர் மூலம் சில பல காரியங்களையும் சாதிப்பீர்கள். பேச்சு, எழுத்து ஆகியவற்றில் கரைகண்டவராக இருப்பீர்கள். ஒரு இலக்கினை நிர்ணயித்துவிட்டால், அதை எப்படியாவது பாடுபட்டாவது முடித்துவிடுவீர்கள்.
இல்லற வாழ்க்கை:
கடக ராசி ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் தலைப்பிள்ளையாக இருப்பீர்கள். உங்கள் இல்வாழ்க்கைத் துணையின் குறைகளை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும். அப்போதுதான், கருத்துவேற்றுமைகள் உண்டாகாது. இல்லையென்றால், பிரச்னையாகவே இருக்கும். இந்த நட்சத்திரக்காரருக்கு உடன்பிறந்தாரின் ஒத்துழைப்பு கிட்டும்.
கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களால், அவரது மாமியாருக்கு ஆகாது என்ற சொலவம் முற்றிலும் தவறானது. ஆரம்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்தாலும் குடும்பத்தினை ஒற்றுமையாக வழிநடத்தவேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள், ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி மற்றும் வருமானம்:
நீங்கள் நடிப்புத் துறையில் நுழைந்தால், சிறந்த நடிகராக இருப்பீர்கள். எழுத்துத் துறையில் இருந்தால்,சிறந்த எழுத்தாளராக இருப்பீர்கள். மொத்தத்தில் கலை சார்ந்த துறைகளிலும் பிசினஸ் செய்தாலும் நல்ல சாதனையாளராக மாறுவீர்கள். ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்து, வருவாய் ஈட்டுவீர்கள் அல்லது ஈட்ட முயற்சிப்பீர்கள்.
ரசாயனம், சிகரெட் தொடர்பான பிசினஸ், பயணம், கலை, இலக்கியம், உளவியல், ஸ்டேஷனரி உற்பத்தி மற்றும் விநியோகம், ஜவுளி, நர்சிங் ஆகிய துறைகளில் வருவாய் ஈட்டுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்