'விஷு கனி காணும் நிகழ்வு முதல் கைநீட்டம் வரை’: விஷு பண்டிகை குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!
விஷு 2025: விஷு என்பது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகையாகும். இது சூரியன் மேஷ ராசிக்கு மாறுவதையும் குறிக்கிறது.

Vishu 2025: மலையாளப் புத்தாண்டு என்று அழைக்கப்படும் விஷு பண்டிகை கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மலையாள மொழிபேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு முக்கியமான வசந்த கால பண்டிகையாகும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
இந்திய ஜோதிடத்தின்படி, இந்தப் பண்டிகை புதிய தொடக்கங்களையும் சூரியன் மேஷ ராசிக்கு மாறுவதையும் சுட்டிக்காட்டுகிறது. அதனால்தான் இது மலையாள மாதமான சிம்ஹ மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.
சமஸ்கிருதத்தில் "விஷு" என்ற வார்த்தைக்கு "சமம்" என்று பொருள்.
இந்த ‘விஷு’ பண்டிகை நாளில் இரவும் பகலும் சமமாக வரும் என்பது நம்பிக்கை. அத்தகைய சிறப்புமிக்க விஷு பண்டிகையின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.
விஷு 2025 தேதி மற்றும் நேரங்கள்:
இந்த ஆண்டு, முக்கியமான விஷு பண்டிகை ஏப்ரல் 14, திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. டிரிக் பஞ்சாங்கத்தின்படி , விஷு கனி காணும் நிகழ்வை கடைப்பிடிப்பதற்கான நல்ல நேரம் அதிகாலை 03:30 மணி ஆகும்.
விஷு பண்டிகையின் வரலாறு:
விஷு பண்டிகைக்கு செழித்த வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகள் வெகுவாக கொண்டது. ஒரு புராணத்தின்படி, நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் வென்ற நாளுடன் இந்நாள் தொடர்புகொண்டது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு புராணத்தின்படி, ராவணன் ஒரு காலத்தில் சூரிய பகவான் கிழக்கில் உதயமாவதைத் தடுத்தான் என்றும்; ராவணனின் மறைவுக்குப் பிறகு, சூரிய பகவான் விஷு நாளில் தனது கிழக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது. இதனை சூரியனின் வெற்றிகரமான வருகையின் அடையாளமாக கூறுகின்றனர்.
விஷுவின் முக்கியத்துவம்:
மலையாள நாட்காட்டியின்படி, விஷு பண்டிகையானது, கேரளாவில் புத்தாண்டைக் குறிக்கிறது.
இந்தப் புத்தாண்டானது மலையாள மொழி பேசும் மக்களால் ஆழமான கலாசார, ஆன்மிக மற்றும் சமூக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
மேஷ சங்கராந்தி எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இது விஷ்ணு மற்றும் கிருஷ்ணரை வழிபடுவதற்கு உகந்த நாளாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய ஜோதிட சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
விஷு பண்டிகையின் கொண்டாட்டங்கள் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளன. அவை விஷு கனி (மங்களகரமான பார்வை), விஷு கைநீட்டம் (பணம் பரிசளிக்கும் வைபவம்) மற்றும் விஷு பலம் (ஆண்டுக்கான ஜோதிட கணிப்புகள்).
விஷு சடங்குகள்:
விஷு கனி: விஷு பண்டிகைக்கு முதல் நாள் இரவு அரிசி, பழங்கள், காணிக்கொன்றை பூக்கள், நாணயங்கள், கண்ணாடி மற்றும் விளக்கு போன்ற பொருட்களை உருளி என்னும் ஒரு பித்தளை பாத்திரத்தில் வைத்திருப்பர். இந்த அமைப்புக்கு பெயர் விஷு கனி என்பர்.
முதல் பார்வை: விஷு பண்டிகையின்போது, குடும்ப உறுப்பினர்கள் கண்களை மூடிக்கொண்டு எழுந்து, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புக்காக முதலில் விஷு கனியை தரிசிப்பார்கள். இது விஷு கனி காணும் நிகழ்வு என அழைக்கப்படுகிறது.
ராமாயண வாசிப்பு: மஞ்சள் நிறத்திலான காணிக்கொன்றைப்பூக்களைப் பார்த்த பிறகு ராமாயணத்திலிருந்து வரும் வசனங்கள் சிலவற்றை வாசிப்பர்.
விஷு படகம்: விஷு பண்டிகையின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்தல் நடைபெறும். இது விஷு படகம் என்று அழைக்கப்படுகிறது.
விஷு சத்யா: மலையாள மொழி பேசும் மக்களால், வாழை இலையில் அவியல், தோரணம், ரசம், பாயசம் போன்ற 20-30 உணவுகள் அடங்கிய பிரமாண்ட சைவ விருந்து பரிமாறப்படும், இது விஷு சத்யா எனப்படுகிறது.
விஷு கைநீட்டம்: விஷு கைநீட்டம் என்பது பெரியவர்கள் குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுக்கு பணம் அல்லது செழிப்புக்கான அடையாளங்களை ஆசீர்வாதமாகக் கொடுத்து பரிசாக வழங்குகிறார்கள். இது விஷு கைநீட்டம் எனப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்