தமிழ் செய்திகள்  /  Astrology  /  Initial Name Find Out Which Zodiac Signs Can Add 2 Initials Before Their Name

Initial Name: எந்த ராசிக்காரர்கள் 2 இனிஷயலை பெயருக்கு முன்னால் சேர்க்கலாம்னு தெரிஞ்சிகோங்க!

Manigandan K T HT Tamil
Jan 27, 2024 01:00 PM IST

‘சிலர் தமிழிலேயே இனிஷியலை வைத்துக் கொள்வார்கள். தமிழில் ஒருவருக்கு இனிஷியல் அமைய வேண்டும் என்றால் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு சந்திரனுடைய தொடர்பு இருக்க வேண்டும்.’

ஜாதகம்
ஜாதகம் (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

'பெயரின் இன்ஷியலும், வெற்றியின் ரகசியமும் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். ஒரு ஜாதக ரீதியாகவே இனிஷயலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு தாந்திரீகமான முறையாகும்.

இனிஷியலில் நிறைய வகைகள் இருக்கிறது. சிலர் இரண்டு இனிஷியலை தங்கள் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டிருப்பார்கள்.

சிலர் அம்மா, அப்பா ஆகிய இருவரின் இனிஷியலையும் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பார்கள். சிலர் ஊரின் இனிஷியலையும் அப்பாவின் இனிஷியலையும் தங்களின் பெயருக்கு முன்னால் வைத்திருப்பார்கள்.

சிலர் பெயருக்கு பின்னால் இனிஷியல் போட்டுக் கொள்வார்கள்.

சிலர் தமிழிலேயே இனிஷியலை வைத்துக் கொள்வார்கள். தமிழில் ஒருவருக்கு இனிஷியல் அமைய வேண்டும் என்றால் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு சந்திரனுடைய தொடர்பு இருக்க வேண்டும்.

அப்போதுதான் தமிழில் இனிஷியல் அமையும். இரண்டாவதாக நான்காம் அதிபதி பலமாக இருக்க வேண்டும். அத்தகைய ஜாதகக்காரர்களும் தமிழில் இனிஷியல் சேர்த்துக் கொள்ளலாம். இதுவொரு மறைமுக தாந்திரீக பரிகாரம் தான்.

தமிழில் இனிஷியல் வைத்திருக்கும் சிலருக்கு வளர்ப்பு பிராணிகள் மீது தீராத காதல் இருக்கும். காலச்சக்கரத்தில் 4ம் இடத்திற்கு உரியவர் சந்திரன்.

தமிழ் இனிஷியலுக்கு முழுமையான காரகர் சந்திரன் தான். தமிழ் இனிஷியலுக்கு நட்சத்திரக காரகர் அஸ்தம். இப்படி ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு விதி இருக்கிறது.

உங்கள் ஜாதகத்தில் குரு, சூரியன் அல்லது 9ம் இடம் கெட்டுப் போயிருந்தால் உங்கள் பெயருக்கு பின்னால் இனிஷியலை சேர்த்துக் கொள்வது சிறந்தது.

இனிஷியலில் அம்மா-அப்பா ஆகிய இருவரின் இனிஷியலை யாரெல்லாம் வைக்கும் சூழல் ஏற்படும் என பார்ப்போம்.

கடக ராசியில் பிறந்தவர்கள், மேஷ லக்கினம், மேஷ ராசியில் பிறந்திருந்தவர்கள், கன்னி லக்கினம், கன்ன ராசியில் பிறந்திருந்தவர்கள் இவர்கள் அனைவருக்கு அம்மா-அப்பாவின் இனிஷியல் நிச்சயம் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

யாருக்கெல்லாம் கஜகேசரி யோகம் இருக்கிறதோ 4, 7, 10இல் கஜகேசரி யோகம் இருப்பின், அவர்கள் எல்லோருமே தாய்-தந்தை இனிஷயலை சேர்த்துக் கொள்ளலாம்.

அப்பா இனிஷியல் முன்னாடியும், அம்மா இனிஷியல் பின்னாடியும் போட்டுக் கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் சூரியனும் செவ்வாயும் ஒன்றாக இருக்கிறதோ, யாருக்கெல்லாம் ஐந்தாம் அதிபதியும் செவ்வாயும் ஒன்றாக இருக்கிறதோ யாருக்கெல்லாம் லக்கினாதிபதியும் சூரியனும் ஒன்றாக இருக்கிறதோ இவர்கள் எல்லாம் பெயருக்கு முன்னாடி ஊர் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

இதனால், அவர்களுக்கு வளர்ச்சி, வெற்றி, முன்னேற்றம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.'

நன்றி: Sri Varahi Jothidam

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்