Sani Bagawan: ’சனி கொடுத்தால் எவர் தடுபார்?’ சனியால் லாபம் பெற வேண்டுமா? இதை பண்ணுங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bagawan: ’சனி கொடுத்தால் எவர் தடுபார்?’ சனியால் லாபம் பெற வேண்டுமா? இதை பண்ணுங்க!

Sani Bagawan: ’சனி கொடுத்தால் எவர் தடுபார்?’ சனியால் லாபம் பெற வேண்டுமா? இதை பண்ணுங்க!

Kathiravan V HT Tamil
Published May 25, 2024 06:30 AM IST

Sani Bagawan: உங்கள் ஒவ்வொரு செயலும், சிந்தனையும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் நன்மைகள் தரக்கூடியதாக இருந்தால் உங்களுக்கு சனி பகவானால் லாபம் உண்டாகும்.

’சனி கொடுத்தால் எவர் தடுபார்?’ சனியால் லாபம் பெற வேண்டுமா? இதை பண்ணுங்க!
’சனி கொடுத்தால் எவர் தடுபார்?’ சனியால் லாபம் பெற வேண்டுமா? இதை பண்ணுங்க!

இது போன்ற போட்டோக்கள்

மேஷம் முதல் மீனம் வரை ஒரு சுற்றை சுற்றி முடிக்க 30 ஆண்டுகளை எடுத்துக் கொள்வதால் சனி பகவானுக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு. 

அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டையும் நிதானமாக  கடக்கும் போது, அந்த ராசிக்காரருக்கு அவரது செயல்பாடுகளுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனி பகவான் வழங்குகிறார். 

கால புருஷனான 10 ஆவது வீடு எனும் தொழில் ஸ்தானமும், 11ஆவது வீடான லாப ஸ்தானமும் இவரது ஆட்சி வீடாக உள்ளது. கால புருஷனின் 7ஆம் வீடு எனும் சமுதாய ஸ்தானம் இவருக்கு உச்ச வீடு ஆகும். 

மேஷத்தில் நீசம் அடையும் சனி 

துலாம் ராசியில் உச்சம் பெற்று, மகரம் ராசியில் ஆட்சி பெற்று, கும்பம் ராசியில் மூலத்திரிகோணம் அடையும் பண்பு உடையவராக சனி பகவான் உள்ளார். தான் என்கின்ற எண்ணமும், தலைமை தாங்கும் தகுதியும், மிகப்பெரிய முன்னேற்றமும் தரக்கூடிய மேஷம் ராசியில் சனி பகவான் நீசம் அடைகிறார். 

சனி பகவானால் லாபம் யாருக்கு?

உங்கள் ஒவ்வொரு செயலும், சிந்தனையும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் நன்மைகள் தரக்கூடியதாக இருந்தால் உங்களுக்கு சனி பகவானால் உங்களுக்கு பெருத்த லாபம் உண்டாகும் என ஜோதிடர் ஸ்ரீராம் ஜி கூறுகிறார்.  

மக்கள் சேவர்கள், தூய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், உணவு தானம் வழங்கும் தன்மை பெற்றவர்கள், கழிவு பொருட்களில் தொழில் செய்பவர்கள், இரும்பு சார்ந்த தொழில்கள் செய்பவர்கள், மெக்கானிக்கல் தொடர்புடைய பணிகள் செய்பவர்கள், தன்னலமற்ற சேவை தொழில்களை செய்பவர்கள், இராணுவ வீரர்கள், மருத்துவர்களுக்கு ஜீவனம் மூலம் லாபத்தையும் வெற்றியையும் தருகிறார்.

சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற தொழில்கள் 

விருப்பு வெறுப்பு இல்லாமல் நீங்கள் பணியாற்றினால் உங்களுக்கு வேண்டியதை தரும் நீதி தரும் கிரகமாக சனி பகவான் உள்ளார்.

இரும்பு தொழிற்சாலைகள், பெட்ரோலிய பொருட்கள், பூமிக்கு அடியில் கிடைக்கும் கனிமவளங்கள் ஆகியவை சனியின் ஆதிக்கம் நிறைந்தவை ஆகும். தொழில் மூலம் கிடைக்கு ஆதாயங்கள் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் பயன் பெரும் போது நீங்கள் அசைக்க முடியாத சக்தியாக வளருவீர்கள். 

தன்னலம் கருதாது சமுதாய மேன்மைக்காக பாடுபடுபவர்களுக்கு லாபத்தை மட்டுமில்லாமல் அவர்களது வம்சத்திற்கும் நற்பலன்களை சனி பகவான் கொடுப்பார். சனி கொடுத்தால் யாராலும் தடுக்க முடியாது.  

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner