Rahu 2024: பொட்டலம் கட்டி புரட்டும் ராகு.. கதறி ஓடப்போகும் ராசிகள்.. கண்ணீர் யாருக்கு சொந்தம்?
Rahu 2024: ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது இடத்தை மாற்றி மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப்பட்டுள்ளார்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக தொடர்ந்து வருபவர் ராகு பகவான். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ராகு கேது எப்போதும் பின்னோக்கிய பயணத்தை செய்யக்கூடியவர்கள். இவர்கள் இரட்டை கிரகங்களாக திகழ்ந்தாலும் வெவ்வேறு ராசியில் பயணம் செய்து தருவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 18, 2025 10:08 PMSani puthan luck: நண்பர்கள் மூலம் ஏமாற்றம்.. திருமண கசப்பு.. சனி புதன் சேர்க்கை பலன்கள் என்னென்ன தெரியுமா?
Mar 18, 2025 06:10 PMசூரியன் மீனம்: கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டப் போகும் ராசிகள்.. சூரியன் மீனத்தில் நுழைந்தார்.. இதுல எது உங்க ராசி?
Mar 18, 2025 03:00 PMசுக்கிரன் யோகம்: கொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பண யோகத்தில் நனையும் ராசிகள்.. மீன ராசி உதயம்!
Mar 18, 2025 01:14 PMமீன ராசி: துன்பங்கள் துரத்தி துரத்தி அடிக்கும் ராசிகள்.. மீன ராசியில் புதன் அஸ்தமனம்.. கஷ்டப்படும் ராசிகள் யார்?
Mar 18, 2025 11:29 AMஇரண்டு கிரகங்களின் மாற்றம்.. இந்த மூன்று ராசிகளுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. பட்ட கஷ்டம் எல்லாம் அகலும்!
Mar 18, 2025 11:17 AMஇந்த மூன்று ராசிக்கு நிலம், வாகனம் வாங்கும் யோகம் இருக்கு.. உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.. புதனால் ஆதாயம்!
ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் தனது இடத்தை மாற்றி மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை எச்சரிக்கை மணி அடித்துள்ளது. பணம் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருமண வாழ்க்கையில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. டிசம்பர் மாதம் வரை உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படாத வாய்ப்பு உள்ளது.
குடும்ப வாழ்க்கையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டிசம்பர் மாதம் வரை நீங்கள் பேச்சுவார்த்தைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். பேச்சு விஷயத்தை நீங்கள் சிக்கல்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்ப ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் 2024 டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடத்தில் கடன் கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பணம் வருவதற்கு மிகவும் தாமதமாகும். செலவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் ஆலோசனை பற்றி நீங்கள் செயல்களில் இறங்குவது நல்லது. பெரிய நிதி இழப்பை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
