தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Viparitha Rajayoga: குரு அமர்ந்தார்.. 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. ஆனந்த கண்ணீரில் மிதக்கப்போகும் ராசிகள்

Viparitha Rajayoga: குரு அமர்ந்தார்.. 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. ஆனந்த கண்ணீரில் மிதக்கப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2024 12:38 PM IST

Viparitha Rajayoga: குரு பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது விபரீத ராஜயோகத்தை உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் யோகம் முழுமையாக கிடைக்கப் போகின்றது.

குரு அமர்ந்தார்.. 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. ஆனந்த கண்ணீரில் மிதக்கப்போகும் ராசிகள்
குரு அமர்ந்தார்.. 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. ஆனந்த கண்ணீரில் மிதக்கப்போகும் ராசிகள்

குரு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மிக முக்கிய கிரகங்களின் மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. குரு பகவானின் இடமாற்றம் மட்டுமே இந்த ஆண்டு நிகழ்கின்றது. ஏனென்றால் இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் மே 1ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் நுழைந்தார். அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.

குரு பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது விபரீத ராஜயோகத்தை உருவாக்கி உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் யோகம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஆடம்பர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்களில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணக்காரராக மாறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel