குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. உங்களை விட மாட்டார்.. பணமழை கொட்டும்.. செல்வத்தின் மிதக்கும் ராசிகள்
Lord Kubera: செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் ஆசிர்வாதத்தை ஒரு சில ராசிகள் பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் இடமாற்றத்தின் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். முக்கிய கிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
Apr 25, 2025 07:00 AMசனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!
Apr 25, 2025 05:00 AMபண மழை கொட்டும் யோகம் யாருக்கு.. அதிர்ஷ்டம் கை வருமா.. இன்று ஏப்.25 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 24, 2025 01:46 PMஇந்த 3 ராசிகள் மே மாதத்திலிருந்து கொடிகட்டி பறக்க போறாங்க.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
12 ராசிகளுக்கு கீழ் உள்ள அனைவரும் தனிப்பட்ட குணாதிசயத்தை பெற்றெடுப்பார்கள். 12 ராசிகளும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பார். குணாதிசயங்கள் எப்படி இருந்தாலும் கிரகங்களின் மாற்றத்தால் சுப மற்றும் அசுப பலன்களை அவ்வப்போது பெறுவார்கள்.
சில ராசிக்காரர்கள் அவ்வப்போது செல்வ செழிப்போடு பிறப்பார்கள். ஏனென்றால் இஷ்ட தெய்வங்களின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் ஆசிர்வாதத்தை ஒரு சில ராசிகள் பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசி
குபேர கடவுளுக்கு பிடித்த ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். உங்களுக்கு எப்போதும் அவருடைய ஆசிகள் உண்டு. வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும் நீங்கள் உறுதியோடு எதிர்கொள்ளீர்கள். வெற்றி உங்களை எப்போதும் தேடி வாழ்க்கையில் பணத்திற்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான சூழ்நிலை உண்டாகும். இது அத்தனை பலன்களையும் குபேர பகவான் உங்களுக்கு கொடுப்பார்.
விருச்சிக ராசி
மிகவும் புத்திசாலி ராசியாக கருதப்படும் உங்களுக்கு எப்போதும் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். வித்தியாசமான விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். முன்னேற்றத்தை நோக்கிய பயணம் அதிகமாக இருக்கும். திட்டமிட்டபடி அனைத்து செயல்களையும் செயல்படுத்துவீர்கள். அதனால் உங்களுக்கு வருமானம் அதிகரித்து கொண்டே இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு செல்வ சுகத்திற்கு எந்த குறையும் இருக்காது. எடுத்த காரியத்தில் முழு அர்ப்பணிப்போடு செயல்படுவீர்கள். இதனால் உங்களுக்கு பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். காரணம் என்னவென்றால் உங்கள் மீது குபேர பகவானின் ஆசிர்வாதம் இருந்து கொண்டே இருக்கும். அவருக்கு பிடித்த ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர்.
துலாம் ராசி
கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் நீங்கள். எப்போதும் புத்திசாலித்தனமாக சிந்திப்பீர்கள். உங்களுடைய அறிவாளித்தனத்தால் பணம் சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக குபேர பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் பொருளாதார நிலைமையில் எப்போதும் குறைவில்லாமல் இருப்பீர்கள். லட்சுமி தேவியின் அருள் ஆசியால் உங்களுக்கு பண வரவு இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டபடி எடுத்த காரியங்களை முடிப்பதில் குறியாக இருப்பீர்கள். வாழும் காலத்தில் உங்களுக்கு யோகம் வந்து கொண்டே இருக்கும். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பணத்தில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. குபேரனின் ஆசிர்வாதம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
