Combination Of Four Planets: 480ஆண்டுகளுக்குப் பின் நிகழும் 4 கிரக சேர்க்கை.. சூரிய கிரகணத்தில் லக் பெறும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Combination Of Four Planets: 480ஆண்டுகளுக்குப் பின் நிகழும் 4 கிரக சேர்க்கை.. சூரிய கிரகணத்தில் லக் பெறும் ராசிகள்!

Combination Of Four Planets: 480ஆண்டுகளுக்குப் பின் நிகழும் 4 கிரக சேர்க்கை.. சூரிய கிரகணத்தில் லக் பெறும் ராசிகள்!

Marimuthu M HT Tamil Published Apr 07, 2024 09:10 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 07, 2024 09:10 PM IST

Combination Of Four Planets: மீன ராசியில் சூரியன் - புதன் - ராகு - சுக்கிரன் ஆகிய நான்கு ராசிகள் ஒன்று சேர்ந்து உண்டான யோகத்தால் நன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்

<p>சூரிய கிரகணம்.&nbsp;</p>
<p>சூரிய கிரகணம்.&nbsp;</p>

இது போன்ற போட்டோக்கள்

இந்த நாளில் மீன ராசியில் நான்கு கிரகங்கள் ஒன்று சேர்கின்றன. அதாவது மீனராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் ஒன்று சேர்கின்றன. இது ஏறத்தாழ 480ஆண்டுகளுக்குப் பின் நிகழும் ஒரு அபூர்வ நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த சதுர்கிரஹி யோகத்தால் பல ராசிகள் நன்மைபெற்றாலும் ஒரு நான்கு ராசிகள் மட்டும் அதிக நன்மைகளைப் பெற்றுள்ளன.

மேஷம்: இந்த சதுர்கிரஹி யோகத்தால்,மேஷ ராசியினருக்கு, சூரிய கிரகணத்தின்போது, கணிசமான அதிர்ஷ்டத்தைப் பெறுவது உறுதி. தொழில் செய்பவர்களுக்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும். இக்காலகட்டத்தில் வாராக்கடன் கூட கைவசம் வந்துவிடும். வெகுநாட்களாக வாங்க நினைத்து வாங்காமல் வைத்திருந்த பொருட்களை, இந்த காலகட்டத்தில் வாங்கும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். வேலையில்லாமல் தவித்து வரும் நபர்களுக்கு, இந்த காலகட்டத்தில் முயற்சி எடுத்தால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்தனை நாட்களாக உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால், இக்காலகட்டத்தில் நல்ல வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்: சூரிய கிரகணத்தின்போது உண்டாகும், சதுர்கிரஹி யோகத்தால், ரிஷப ராசியினருக்கு இத்தனை நாட்களாக இருந்த பிரச்னை தீரும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரிவு, தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த சண்டைகள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். கடந்த ஆண்டுகளில் சரியான ஊதிய உயர்வு இல்லாமல், வேறு ஒரு நிறுவனத்துக்கு மாறியவர்கள் இக்கால கட்டத்தில் மீண்டும் பணியைத் தேட ஆரம்பித்தால் அது நல்ல ஊதியத்துடன் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. வங்கியில் இருப்புக் கணக்கு அதிகரிக்கும்.

சிம்மம்: சூரிய கிரகணத்தின்போது உண்டாகும், சதுர்கிரஹி யோகத்தால், சிம்ம ராசியினருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கும். தொழில் செய்யும் சிம்ம ராசியினருக்கு வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். நீண்டநாட்கள் கிடைக்காமல் இருந்த வேலை கை வசம் வந்துசேரும். ஈ.எம்.ஐ-யிலாவது புதிய மனை மற்றும் வண்டி வாங்க வாய்ப்புள்ளது. பிரிந்து சென்ற சொந்தங்கள், உங்களது உள்ளன்பைப் புரிந்துகொண்டு சேர்வார்கள்.

தனுசு: சூரிய கிரகணத்தின்போது உண்டாகும், சதுர்கிரஹி யோகத்தால், தனுசு ராசியினருக்கு எக்கச்சக்க நன்மை கிடைக்கும். இத்தனை நாட்களாக கடன்பட்டு அல்லல்பட்டு வந்த தனுசு ராசியினர், இனி மெல்ல நிதானத்தைப் பெறுவீர்கள். ஏனெனில், இக்காலகட்டத்தில் கடனை அடைக்கும் அளவுக்கு, வருவாய் வருவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழிலில் வெகுநாட்களாக கிடைக்காமல் இருந்த லாபம் கிடைக்கும். உங்களுக்கு எதிராக தொழிலில் நுழைந்து, உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் அடிபணிந்து போகும் சூழ்நிலை வந்துவிட்டது. சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். உங்களது பொறுமையும் இனிமையான பேச்சும் இன்னும் கூடுதல் வெற்றியைப் பெற்றுத்தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்