Kanavu Palangal : நல்லா யோசிங்க.. இந்த விஷயங்களை உங்கள் கனவில் பார்தீர்களா? அப்போ நீங்க யோகக்காரர்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kanavu Palangal : நல்லா யோசிங்க.. இந்த விஷயங்களை உங்கள் கனவில் பார்தீர்களா? அப்போ நீங்க யோகக்காரர்கள்!

Kanavu Palangal : நல்லா யோசிங்க.. இந்த விஷயங்களை உங்கள் கனவில் பார்தீர்களா? அப்போ நீங்க யோகக்காரர்கள்!

Divya Sekar HT Tamil Published Oct 04, 2024 10:01 AM IST
Divya Sekar HT Tamil
Published Oct 04, 2024 10:01 AM IST

Kanavu Palangal : இந்த விஷயங்கள் நீங்கள் கனவில் கண்டால் பணக்காரர் ஆகப் போகிறீர்கள் என்று அர்த்தமாம். அப்படி என்ன விஷயங்கள் நாம் கனவில் கண்டால் பணக்காரர் ஆகப் போகிறோம் என்பது குறித்து பார்க்கலாம்.

Kanavu Palangal : நல்லா யோசிங்க.. இந்த விஷயங்களை உங்கள் கனவில் பார்தீர்களா? அப்போ நீங்க யோகக்காரர்கள்!
Kanavu Palangal : நல்லா யோசிங்க.. இந்த விஷயங்களை உங்கள் கனவில் பார்தீர்களா? அப்போ நீங்க யோகக்காரர்கள்!

இது போன்ற போட்டோக்கள்

ஒரு சில கனவுகள் மறக்கவே முடியாமல் வியக்கத்தக்க வகையில் நாள் முழுவதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். சிலர் இரவில் கண்ட கனவைப் பற்றி நீண்ட நேரம் யோசிப்பார்கள். கெட்ட கனவு நனவாகும் என்று பலரும் அச்சம் ஏற்படுவதுண்டு. 

பெரும்பாலான கனவுகள் நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத வகையில் இருக்கும். வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத நிகழ்வுகள் அல்லது விஷயங்களைப் பற்றியும் கனவுகள் வரலாம்.

பணக்கார யோகம்

இந்த விஷயங்கள் நீங்கள் கனவில் கண்டால் பணக்காரர் ஆகப் போகிறீர்கள் என்று அர்த்தமாம். அப்படி என்ன விஷயங்கள் நாம் கனவில் கண்டால் பணக்காரர் ஆகப் போகிறோம் என்பது குறித்து பார்க்கலாம்.

தங்கம்

கனவில் தங்கத்தை கண்டால் நீங்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தமாம். பணம் வீட்டில் குவிய போகிறது அல்லது பணம் வருவதற்கான வாய்ப்பு உங்களுக்கு அமையப் போகிறது என்று அர்த்தமாம்.

ரோஜா

கனவில் ரோஜா மலரை கண்டால் பணம் கொட்டப் போகிறது பணக்காரர் ஆக போகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. அதேபோல தாமரை மலரை கனவில் கண்டால் லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்பது அர்த்தமாம்.

விளக்கு

உங்கள் கனவில் விளக்கை கண்டால் அதுவும் விளக்கு எறிவது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கை மங்களகரமாக இருக்கப் போகிறது என்று அர்த்தமாம் உங்கள் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகப்போகிறது என்று அர்த்தமாம். எனவே இந்த மாதிரி கனவு கண்டால் நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும் என்று சாஸ்திரப்படி கூறப்படுகிறது.

மோதிரம்

உங்கள் கனவில் மோதிரம் அணிவது போல் அல்லது மோதிரத்தை கண்டால் லட்சுமிதேவி உங்களை ஆசீர்வதிக்கிறார் என்று அர்த்தமாம். உங்களிடம் பணம் பெருகும். இந்த கனவு உங்களை பணக்காரன் ஆக்கக்கூடிய அம்சத்தை காட்டுகிறது.

காதணி

உங்கள் கனவில் காதணி அதாவது தோடு கண்டால் நீங்கள் பணம் அதிகம் சம்பாதிக்க போகிறீர்கள் என்று அர்த்தமாம். நீங்கள் ஒரு வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அதன் மூலம் உங்களுக்கு வருமானம் பெறுக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சாஸ்திரப்படி கனவில் காதணி வந்தால் நல்ல பலன் தரும் என்று அர்த்தமாம்.

பாம்பு

அதேபோல கனவில் பாம்பு வந்தால் ஆபத்து என்பது நம் அனைவரும் பொதுவாக அறிந்த ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் இந்த பாம்பு பணப்பெட்டி அருகே இருந்தால் உங்களை தேடி பணம் வரப்போகிறது என்று அர்த்தமாம். கனவு சாஸ்திரப்படி இது சொல்லப்பட்டுள்ளது.

பால்

அதேபோல உங்கள் கனவில் பால் குடிப்பது போல கனவு வந்தால் உங்களைத் தேடி பணம் வரப்போகிறது கையில் பணம் நிறைய போகிறது என்று அர்த்தமாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.