Vastu Tips: பணப்பிரச்னை நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமா..! வீட்டில் இந்த நான்கு விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips: பணப்பிரச்னை நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமா..! வீட்டில் இந்த நான்கு விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்

Vastu Tips: பணப்பிரச்னை நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமா..! வீட்டில் இந்த நான்கு விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 11, 2024 09:50 PM IST

நிதி பிரச்னைகளில் இருந்து விடுபட வேண்டுமா, பணப்பிரச்னை நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்க வீட்டில் இந்த நான்கு விஷயங்களை தவறாமல் செய்யுங்கள் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பணப்பிரச்னை நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்க வீட்டில் இந்த நான்கு விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்
பணப்பிரச்னை நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்க வீட்டில் இந்த நான்கு விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்

இது போன்ற போட்டோக்கள்

ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது என்பது கிட்டத்தட்ட பெரும்பாலோனரின் கனவாகவே உள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நிறைய வருமானம், நல்ல வீடு, வீட்டில் எல்லா வசதிகளும் இருக்க வேண்டும் என்பது அநேகம் பேரின் விருப்பமாக உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கு கண்டிப்பாக கடின உழைப்பு தேவை.

தொடர்ந்து கடுமையாக உழைத்தாலும், பல நேரங்களில் சிலருக்கு மட்டுமே எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இன்னும் சிலரால் கடுமையாக உழைத்தாலும் பணம் சார்ந்த பிரச்னைகளும், நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழலும் உருவாகும். தொடர்ந்து நிதி சிக்கல்கள் ஏற்படும். சம்பாதிக்கும் பணம் கையில் நிற்காது.

இதற்கு சில வாஸ்து தீர்வுகள் உள்ளன. சில பொருள்களை வீட்டில் வைப்பதன் மூலம் நிதி நெருக்கடிகள் நீங்கும். அதிர்ஷ்டத்தையும் பெறலாம்.

வீட்டில் இருக்கும் சில விஷயங்களை சரியாக வைக்காவிட்டால் வருமானத்தை தரும் லட்சுமி தேவி வீட்டின் வாசலை கடந்து உள்ளே வரமாட்டார் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. எனவே வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்துக்கு என்னென்ன பொருள்கள் இருக்க வேண்டும் என்று வாஸ்துவில் கூறப்படும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்

விநாயகர் சிலை

வீட்டின் பூஜை அறையில் அல்லது பிரதான அறையில் விநாயகரின் புகைப்படம் அல்லது சிலை வைப்பது மிகவும் மங்களகரமானது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, தடைகளை நீக்கும் விநாயகர், வாழ்வின் அனைத்து எதிர்மறைகளையும் தடுப்பதாக கூறப்படுகிறது. விநாயகர் சிலை இருப்பால்வீட்டில் நேர்மறை ஆற்றல் பாயும். அதன் மூலம் வாஸ்து தோஷங்கள் தீரும். நிதி ஓட்டம் மேம்படும்.

லட்சுமி அல்லது குபேரனின் சிலை

லட்சுமி நிதியின் தெய்வம். பணம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட, லட்சுமி மற்றும் குபேரனின் சிலை அல்லது புகைப்படத்தை வீட்டில் வைக்க வேண்டும் என்று வாஸ்துவில் கூறப்படுகிறது. லட்சுமி தேவி மற்றும் குபேரனின் அருளால் வாழ்வில் செல்வத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கையாக உள்ளது.

தேங்காய்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் தேங்காய் வைத்திருப்பது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. பெரும்பாலான பாரம்பரிய வீடுகளில் பூஜை அறையில் உள்ள கலசத்தில் தேங்காய் வைப்பதிருப்பதை காணலாம். வீட்டில் தேங்காய் வைப்பது மிகவும் மங்களகரமானது. இதனால் வீட்டுக்கு மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. தேங்காய் துளிர்விடுவதால் செல்வம் பெருகி புதிய மரம் பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

சங்கு

வீட்டின் பூஜை அறையில் சங்கு வைப்பது மங்களகரமானது என்கிறது வாஸ்து சாஸ்திரம். இது வீட்டில் நேர்மறையான தொடர்புகளை கொண்டு வருகிறது. சங்கு வாஸ்து தோஷங்களை நீக்கும். இது வாழ்க்கையில் அமைதியைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. சங்கு ஊதுவது உடல் நலத்துக்கும் நல்லது. உடல் ஆரோக்கியம் சீராகி, மகிழ்ச்சியும் பெருகும்.

பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரை நிலவும் தகவல்கள், செய்திகள் அனைத்தும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இது வாசகர்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்படுகிறது. இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: