Money Problem : செவ்வாய்க்கிழமை இதை செய்தால் கடன் பிரச்சனை கரைந்து போகும்.. நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Problem : செவ்வாய்க்கிழமை இதை செய்தால் கடன் பிரச்சனை கரைந்து போகும்.. நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்!

Money Problem : செவ்வாய்க்கிழமை இதை செய்தால் கடன் பிரச்சனை கரைந்து போகும்.. நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்!

Divya Sekar HT Tamil Published Mar 26, 2024 02:21 PM IST
Divya Sekar HT Tamil
Published Mar 26, 2024 02:21 PM IST

இந்த பரிகாரத்தை செய்தால் போதும் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கடன் அடைப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இதனை நீங்கள் செவ்வாய் கிழமை தான் செய்ய வேண்டும்.

மகாலட்சுமி யோகம்
மகாலட்சுமி யோகம்

இது போன்ற போட்டோக்கள்

நீங்கள் கடன் பிரச்சனையை தீர எத்தனையோ பரிகாரங்களை செய்து இருப்பீர்கள் அது சிலருக்கு பரிகாரம் நன்மை அளித்திருக்கும் ஆனால் சிலருக்கு இருந்த கடன் பிரச்சனை அப்படியேதான் இருக்கும். அதிலிருந்து அவர்களுக்கு விடிவு காலம் என்பது கிடைக்காமல் போயிருக்கும். அப்படி இருக்கும் நபர்கள் இனி கவலை கொள்ள தேவையில்லை. இந்த பரிகாரத்தை செய்தால் போதும் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

கடன் அடைப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இதனை நீங்கள் செவ்வாய் கிழமை தான் செய்ய வேண்டும். கடன் அடைப்பதற்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமையாக கருதப்படுகிறது எனவே இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய்க்கிழமை செய்தால் பலன் கூடும்.

இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் மஞ்சள் மற்றும் உப்பு இதை இரண்டையும் தான் பயன்படுத்த போகிறோம். உங்களுக்கு லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கலன்கள் இருந்தாலும் இந்த பரிகாரம் செய்வதினால் இதில் பயன்படுத்தும் கல் உப்பு கரைவது போல் உங்கள் கடன்களும் குறையும் என்று நம்பப்படுகிறது.

இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய் உரை நேரத்தில் தான் செய்ய வேண்டும் அதாவது காலை 6 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளும் அதேபோல மதியம் ஒரு மணியிலிருந்து 2 மணிக்குள்ளும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அப்பொழுது தான் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சனைகள் தீரும் எனவே இந்த நேரத்தை பயன்படுத்தி இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வது நல்லது.

பரிகாரம் செய்வது எப்படி

உங்கள் இரண்டு உள்ளங்களிலும் கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் மகாலட்சுமி படத்திற்கு முன்பு தான் செய்ய வேண்டும்.

முதலில் உள்ளங்கையில் கல் உப்பை எடுத்துக்கொண்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த கல் உப்பை ஒரு தட்டில் போட்டு விசாலமாக பரப்பவும்‌.

அந்தத் தட்டில் வைத்த கல் உப்பில் உங்கள் கடன் தொகை எவ்வளவோ அதனை ஆள்காட்டி விரலை பயன்படுத்தி எழுதவும். அது ஆயிரக்கணக்கில் இருந்தாலும் சரி இலட்சக்கணக்கில் இருந்தாலும் சரி அல்லது கோடிக்கணக்கில் இருந்தாலும் சரி அதனை அந்த தட்டில் எழுத வேண்டும்.

நீங்கள் எழுதி முடித்த பின்பு விரலி மஞ்சள் எடுத்து அதன் மேல் வைத்து விடுங்கள். அவ்வளவுதான் இந்த பரிகாரம் இதனை நீங்கள் லட்சுமி தேவியின் படத்திற்கு முன்பு 11 நாட்கள் வைக்க வேண்டும். அந்த 11 நாட்களும் நீங்கள் கடன் அடைக்க முயற்சிகளை எடுக்க வேண்டும் அந்த முயற்சிகள் கண்டிப்பாக இந்த பரிகாரத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

பின்னர் 11 நாட்கள் கழித்து அந்த விரலி மஞ்சள் எடுத்து உங்கள் பூஜை அறையில் வைத்துவிட்டு கல் உப்பை உங்கள் இரண்டு உள்ளங்கையால் எடுத்து தண்ணீர் நிரப்பி அதில் கல் உப்பை கரைக்கவும் அப்பொழுது மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அந்த கள் உப்பு கரைவது போல உங்கள் கடனும் கரைந்து விடும்.

சிறிய கடன் தொகையாக இருந்தால் 11 நாட்களுக்குள் அந்த பிரச்சனை உங்களுக்கு நிவர்த்தி செய்யப்படும் இதுவே பெரிய கடன் தொகையாக இருந்தால் மூன்று முறை இந்த பரிகாரத்தை செய்யுங்கள் உங்களுக்கு நல்ல வழி பிறக்கும்.

நன்றி : வெற்றியின் இரகசியம்

Whats_app_banner