தமிழ் செய்திகள்  /  Astrology  /  If This Root Is Present In The House, The Money Will Increase Manifold

Increase Money : வீட்டில் இந்த வேர் இருந்தால் போதும்.. பணம் பல மடங்கு பெருகுமாம்.. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

Divya Sekar HT Tamil
Jan 22, 2024 02:25 PM IST

வீட்டில் இந்த வேர் இருந்தால் பணம் பல மடங்கு பெருங்குமாம். நம் பூஜை அறையில் இந்த வேர் இருந்தால் செல்வம் செழிக்கும் என சொல்லப்படுகிறது. அது என்ன வேர் என்பது குறித்து இதில் காண்போம்

வீட்டில் இந்த வேர் இருந்தால் பணம் பல மடங்கு பெருங்குமாம்
வீட்டில் இந்த வேர் இருந்தால் பணம் பல மடங்கு பெருங்குமாம்

ட்ரெண்டிங் செய்திகள்

சித்தர்கள் சில வழிமுறைகளை சொல்லி இருக்கிறார்கள். பணம் பெருக இதனை பின்பற்றினால் செல்வம் செழிக்கும் என சொல்லப்படுகிறது. சித்தர்கள் சொன்ன ஒன்றுதான் சஞ்சீவி வேர்.

இந்த சஞ்சீவி வேர் கிராமங்களில் இருந்தும் செம்போத்து பறவை கூடுகளில் இருந்து நமக்கு கிடைக்கும். கேட்பதற்கு மிகவும் எளிதாக இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் இந்த வேரை நாம் பெற்று விட முடியாது.

இந்தப் பறவை குயில் இனத்தை சேர்ந்தது, செண்பக குயில் எனவும் இப்பறவை அழைக்கப்படுகிறது. இந்த பறவை நீண்ட வாலுடனும் கரு நிறத்துடனும், சிவப்பு நிற கண்களையும் உடையது.

இந்தப் பறவை மரங்களில் கூடு கட்டி வசிக்கும். அப்படி வசிக்கும் போது அதில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து அந்த குஞ்சுகள் பெரிதாகி கூட்டை விட்டு வெளியேறும். அப்பொழுது தாய் பறவையும் வெளியேறும். கூடு காலியாக இருக்கும். அந்த சமயத்தில் அந்தக் கூட்டை நாம் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். 

அதாவது நாம் சுத்தபத்தமாக இருக்கும்போது அந்த கூட்டை எடுத்து வர வேண்டும். எடுத்து வந்து அதனை தூய்மைப்படுத்தி நெருப்பில் எறிய விட வேண்டும். அப்படி எரியவிடும் போது எல்லாம் குச்சிகளும் எரிந்து விடும். ஆனால் பச்சை வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு வேர் மட்டும் எரியாமல் இருக்கும். அதுதான் நமக்கு தேவைப்படக்கூடிய சஞ்சீவி வேர்.

இந்த வேரை எடுத்து பூஜை அறையில் வைத்து தினமும் கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். நீங்கள் தினமும் இப்படி வழிபடும் போது அந்த வேரை தொட்டு உடல் மனம் ஆன்மா மூன்றும் ஆத்மார்த்தமாக இருக்கும் போது தொட்டு வணங்க வேண்டும். கெட்ட எண்ணத்தில் உடல் மனம் சுத்தம் இல்லாதவர்கள் இந்த வேரைத் தொட்டால் அந்த வேரின் சக்தி போய்விடுமாம்.

நீங்கள் பணம் தொடர்பான வேலையை செய்யும்போது இந்த வேரை கையிலோ அல்லது பையிலோ வைத்து செய்யும்போது அந்த வேலை வெற்றிகரமாக முடிந்து உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்குமாம். இதில் உங்களுக்கு பண பிரச்சனை வர வாய்ப்பில்லையாம். மிக முக்கியமாக பறவையின் கூடு காலியாக இருக்கும் போது மட்டுமே இதை நாம் எடுக்க வேண்டும். அதற்கு முன்பு அதனை எடுத்து விடக்கூடாது. அதாவது பறவை கூட்டை காலி செய்த பிறகு அந்த கூட்டை நாம் எடுக்க வேண்டும்.

நன்றி : AisHutte

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்