தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kanavu Palangal : இந்த 7 கனவுகள் வந்தால் சீக்கிரம் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி.. மிகப்பெரிய வெற்றி கிட்டும்!

Kanavu Palangal : இந்த 7 கனவுகள் வந்தால் சீக்கிரம் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி.. மிகப்பெரிய வெற்றி கிட்டும்!

Divya Sekar HT Tamil
Apr 20, 2024 11:16 AM IST

kanavu palangal in tamil : கோயில் சார்ந்து நாம் கனவுகள் கண்டால் எந்தெந்த கனவுகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

கனவு பலன்கள்
கனவு பலன்கள்

இதில் நாம் எந்தெந்த கனவுகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது என்பது குறித்து பார்க்கலாம். மனிதர்கள் கனவில் கண்டால், கட்டிடங்களை கனவில் கண்டால்,பொருட்களை கனவில் கண்டால், பஞ்சபூதங்கள் கனவில் வந்தால், பறவைகள் கனவில் வந்தால், தானியங்கள் கனவில் வந்தால், விலங்குகள் கனவில் வந்தால், கோவில்கள் கனவில் வந்தால் என நிறைய கனவு பலன்கள் உள்ளது. அதில் இப்போது கோயில்களில் இந்த மாதிரியான கனவுகள் வந்தால் என்ன பலன் அது சாதகமாக பாதகமா என்பது குறித்து பார்க்கலாம்.

கோயில்கள் பற்றிய கனவுகள் உங்களுக்கு வந்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்று அர்த்தமாம். கோயிலுக்குள் போக முடியாமல் கூட்டத்தில் சிக்கி தவிப்பது போல கனவு கண்டால் எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு அவதிப்பட போகிறீர்கள் என்பது இந்த கனவின் அர்த்தமாம்.

கோயில்களில் தனியாக இருப்பது போல கனவு கண்டால் தொழிலில் தேக்கம் இருக்கிறது அல்லது இருக்கப் போகிறது என்பது அர்த்தமாம். கோயில் நடை திறந்து அதில் நீங்கள் செல்வது போல கனவு கண்டால் நீங்கள் நினைக்கும் காரியம் 100% வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உணர்த்துமாம்.

கோயில் கருவறைக்கு சென்று கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு லாபம் கிட்டும் பணம் பொருள் செல்வம் செழிக்கும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிட்டும் என்பது அர்த்தமாம்.

கடவுளை கனவில் கண்டால் பிரச்சனைகள் உங்களை விட்டு அகலும் என்று அர்த்தமாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண யோகம் கைகூடும். திருமண தடைகள் அனைத்தும் நீங்கும். உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. கடவுளை நீங்கள் கனவில் கண்டால் இத்தனை பலன்களும் உங்களை வந்து சேருமாம்.

காளி தீபம் உங்கள் கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கும் அல்லது சண்டை சச்சரவுகள் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது அர்த்தமாம்.

கோபுரத்தை நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய கொள்கையை கடைப்பிடிக்க போகிறீர்கள் அதன் மூலம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக போகிறது என்பது அர்த்தமாம். அதேபோல உங்கள் பாவங்களும் நீங்குமாம்.

கோயிலில் பிரசாதம் வாங்குவது போல கனவு கண்டால் உங்களுக்கு சிலரால் பிரச்சனை ஏற்பட போகிறது என்பது அர்த்தமாம்.

கோயில் தெப்பக்குளம் உங்கள் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் கடல் தாண்டி போகப் போகிறார்கள் என்ற அர்த்தம்.

கடவுளிடம் பேசுவது போல நீங்கள் கனவு கண்டால் மிகவும் சுபம் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அகலும் இறைவன் உங்கள் வீட்டிலேயே இருக்கிறார் என்று அர்த்தமாம்.

கோயில் தேர் கனவில் கண்டால் உங்களைத் தேடி இறைவன் வருகிறான் என்று அர்த்தமாம் நீங்கள் நினைத்தது கை கூடும். வெகு சீக்கிரத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் இறைவன் உங்களுடன் இருப்பார்.

நன்றி : மகேஷ் ஐயர்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்