Astro Tips:'நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் அந்த செயல் தடங்கல் ஆகிறதா?’: உங்கள் வாழ்வை மாற்றும் 5 பரிகாரங்கள்
Astro Tips: வியாபாரத்தில் வெற்றி பெற முடியவில்லை, பதவி உயர்வு கிடைக்கவில்லையா? நீங்கள் கண்டிப்பாக இந்த 5 பரிகாரங்களை முயற்சித்தால் வெற்றியை அடைய முடியும்.

Astro Tips: வாழ்க்கையில் எல்லோரும் நல்ல பெயர் எடுத்தோ, பொருளாதார ரீதியாகவோ வெற்றியை அடைய கடினமாக முயற்சி செய்கிறார்கள். ஆனால், சிலர் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. நீங்கள் செய்யும் எல்லாப் பணிகளிலும் வெற்றிகரமாக இருக்க விரும்பினால், இந்த சில விஷயங்களை வானியல் சாஸ்திரம் கூறியபடி முயற்சிக்கவும். உங்களுக்கு வேறு வழியில்லை.
இது போன்ற போட்டோக்கள்
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
Apr 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 20 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 19, 2025 04:38 PMமீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
Apr 19, 2025 02:08 PMகேது பெயர்ச்சி பலன்கள்: இனி 3 ராசிகள் மீது பண மூட்டைகள் விழும்.. கேது ஆட்டம் ஆரம்பம்.. உங்க ராசி என்ன சொல்லுங்க?
Apr 19, 2025 01:29 PM62 ஆண்டுகளுக்கு பின் இன்று பாரிஜாத யோகம்.. எந்த 3 ராசிகளுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும் பாருங்க!
வியாபாரத்தில் திட்டமிட்டபடி வெற்றி கிடைக்கவில்லையா, எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லையா, வெற்றி என்பது அரிதான விஷயம் ஆகிவிட்டதா, பதவி உயர்வு கிடைக்கவில்லையா? நீங்கள் கண்டிப்பாக இந்த வானியல் சாஸ்திர முறைப்படி முயற்சிக்க வேண்டும்.
நீங்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோல்வியுற்றால், இந்த வானியல் சாஸ்திரம் நன்றாக வேலை செய்யும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். சில நாட்களுக்கு இந்த வானியல் சாஸ்திரத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் வாழ்க்கையில் பின் தங்கிப்போக அவசியம் இருக்காது.
வெற்றியை அடைய இந்த 5 பரிகாரங்களை முயற்சிசெய்யுங்கள்:
- காகங்களுக்கு உணவு:
உங்களால் வெற்றியை அடைய முடியாவிட்டால், நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது, காகங்களுக்கு உணவு கொடுங்கள். இப்போது உங்கள் வேலை நல்ல முறையில் முடிந்துவிடும். எந்த தடைகளும் இருக்காது.
2. திருஷ்டி நீங்க எலுமிச்சை:
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, முக்கியமான விஷயங்களைச் செய்வதற்கு வீட்டை விட்டுப் புறப்படும் முன் இந்த எலுமிச்சை தீர்வைப் பின்பற்றவும். ஒரு எலுமிச்சையுடன் நான்கு கிராம்பு சேர்த்து 'ஓம் ஸ்ரீ ஹனுமாதே நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். பின்னர் இந்த எலுமிச்சையை உங்கள் கைகளில் வைத்து எடுத்துச்செல்லுங்கள். இவ்வாறு செய்தால், நீங்கள் வெற்றியை அடைய முடியும்.
3. பறவைகளுக்கு உணவு:
சனி, ராகு மற்றும் கேதுவின் தாக்கத்தால் உங்களுக்கு வேலை முடிவடையவில்லை என்றால், பறவைகளுக்கு ஏழு தானியங்களை உணவாகப் போடவும். நாம் கொடுக்கும் தானியங்களை, பறவைகள் சாப்பிட்டால் வேலை முடிந்துவிடும் என்று பலர் நம்புகிறார்கள்.
4. விநாயகர் சிலையை எடுத்துச்செல்லுங்கள்:
நீங்கள் சில மாதங்களாகவே,தோல்வியின் முகத்தில் இருக்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல செயல் நடக்க, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உங்களுடன் ஒரு சிறிய விநாயகர் சிலையை எடுத்துச் செல்லுங்கள். விநாயகர் வேலையில் இருந்த தடைகளை நீக்குவார். இத்துடன் உங்கள் வேலை சுலபமாக வெற்றிகரமாக முடிவடையும்.
5. கருப்பு மிளகு பரிகாரம்:
முக்கியமான வேலைக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கருப்பு மிளகினை வீட்டு வாசலில் வைத்து, அவற்றைத் தாண்டிச் செல்லுங்கள். உங்கள் வேலையில் இருந்த தடைகள் நீங்கி வேலை நல்ல முறையில் நிறைவடையும்.
பொறுப்புத்துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்