தமிழ் செய்திகள்  /  Astrology  /  Idols Of Thesr Gods And Goddesses Should Not Be Placed In The Puja Room

Vastu Tips: தப்பித்தவறியும் வீட்டின் பூஜை அறையில் வைக்கக்கூடாத கடவுள் படங்கள் எவை! பணம், உடல் சார்ந்த பிரச்னை வரலாம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 20, 2024 03:58 PM IST

வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டிய கடவுளரின் புகைப்படங்கள், தப்பிதவறியும் வைக்ககூடாத கடவுளரின் புகைப்படங்கள் பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை பார்க்கலாம்

வாஸ்த்துப்படி பூஜை அறையில் வைக்க கூடாத கடவுளரின் புகைப்படங்கள்
வாஸ்த்துப்படி பூஜை அறையில் வைக்க கூடாத கடவுளரின் புகைப்படங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்துக்களின் வழிபாட்டு முறையில் பல்வேறு தனித்துவ விஷயங்கள் இருக்கின்றன. இதில் குலதெய்வ வழிபாடானது மிகவும் பிரதானமாக இருந்து வருகிறது. குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு பலரும் தங்களது குலதெய்வங்களின் புகைப்படங்கள் பூஜை அறையில் வைத்து வழிபடுவதுண்டு. அதேபோல் விருப்ப தெய்வங்கள், குருமார்கள் ஆகியோரின் படங்களை வைத்தும் வழிபாடு செய்யும் பழக்கம் பலருக்கும் உள்ளது.

நாள்தோறும் சிறப்பு பூஜை செய்வதன் மூலம் நேர்மறை அதிர்வுகள் வீட்டுக்கும், மனதிலும் ஏற்படும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. நேர்மறை ஆற்றல் மனதுக்கு புத்துணர்வும், ஆற்றலும் தருவதோடு, நாம் செய்யும் பணிகளின் செயல்திறனை அதிகரிக்க செய்வதன் மூலம் முன்னேற்றம், செழிப்பு மற்றும் அமைதியை கிடைக்க செய்கிறது.

விரும்பிய கடவுளர்கள், குருமார்கள் புகைப்படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதற்கு முன்பு நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களும், பூஜை அறையில் எந்தெந்த கடவுளரின் படங்களை வைக்க கூடாது என்பது பற்றியும் வாஸ்துவில் கூறப்படும் விஷயங்கள் பற்றி வல்லுநர்கள் கூறும் விஷயங்களை பார்க்கலாம்

வாஸ்து முறைப்படி பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் கடவுளரின் புகைப்படங்கள் சரியான திசையை நோக்கி இருக்க வேண்டும். குறிப்பாக வட கிழக்கு திசை நோக்கி இருப்பது சிறப்பு என கூறப்படுகிறது. இந்த திசையில் கடவுள் படங்கள் இருந்தால் வீட்டிலும், வீட்டில் இருப்பவர்களுக்கும் எப்போதும் நேர்மறை ஆற்றல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிந்தோ, அறியாமலோ சில கடவுளரின் புகைப்படங்களை பூஜை அறையில் வைப்பதன் மூலம் சில பிரச்னைகளையும் சந்திக்க நேரிடலாம். அந்த வகையில் பைரவர், மகாகாளி, சனிபகவான், ராகு கேது புகைப்படங்கள் வீட்டில் இருக்ககூடாதாம். இந்த கடவுளர்களை கோயில் வைத்து மட்டுமே தரிசனம் செய்ய வேண்டுமாம். எந்த சூழ்நிலையிலும் மேற்கூறிய கடவுளரின் படங்களை வீட்டிலோ அல்லது பூஜை அறையிலோ பிரதிஷ்டை செய்யக்கூடாது என வாஸ்துப்படி கூறப்படுகிறது.

பூஜை அறையில் வைக்க கூடாத பொருள்கள்

உடைந்த அல்லது சேதமடைந்த கடவுள் புகைப்படங்களை தப்பித்தவறியும் பூஜை அறையில் வைக்க கூடாது. ஏனென்றால் வாஸ்து சாஸ்த்திரத்தின் படி உடைந்த இவை வீட்டில் தீமை ஏற்படுவதையோ அல்லது ஏற்பட இருப்பதையோ குறிப்பதாகும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்க்கையில் பிரச்னையும், குடும்பத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.

பூஜை அறையில் வாடிய மலர்கள் ஒருபோது இருக்க கூடாது. பூஜைக்காக வைத்த மலர்கள் வாடியதும் உடனடியாக அகற்றிவிட வேண்டும். அத்துடன் தீபம் ஏற்றிய பின் பயன்படுத்திய தீக்குச்சிகள் அல்லது தீ பொட்டலங்களை வைத்து வழிபட்டால் பலன் கிடைக்காது.

கோயில்களில் வைத்து வணக்ககூடாத கடவுளரின் சிலைகள்

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், மார்பிள் போன்ற சிலைகள் கோயில்களில் இடம்பெறக்கூடாது. ருத்ர முத்திரை கொண்ட எந்த தெய்வத்தின் சிலைகளையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது. நடன அசைவுடன் இருக்ககூடிய எந்த கடவுளின் சிலைகள் அல்லது படங்கள் பூஜை அறையில் இருக்கக்கூடாது.

சிவபெருமானை வணங்கும் பக்தர்கள் பலரும் தங்களது வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவதுண்டு. ஆனால் சிவன் - பார்வதி ஒன்றாக இருக்கும் சிலை, படங்கள் வைத்து வணங்குவது மிகவும் மங்கலம் தரும் என கூறப்படுகிறது. சிவபெருமான் கோபத்துடன் இருப்பது போன்ற புகைப்படங்களை வைக்க கூடாது.

துர்க்கை அம்மன் புகைப்படத்தை வைக்க விரும்புவோர் அவரது மகிஷாசுர மர்தினி அவதாரத்தை வைக்கலாம். அதேபோல் அவரது வாகனமான சிங்கத்துடன் இருப்பது போன்ற படத்தையும் வைத்து வழிபடலாம். இதில் சிங்கத்தின் வாய் திறக்காமல் இருக்கும் படத்தை வைப்பது சிறப்பான விஷயம். கடவுள் லட்சுமி அமர்ந்திருக்கும் புகைப்படம் வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டுக்கு செழிப்பு வந்து சேரும்.

பொதுவாக, உங்கள் பூஜை அறையில் தேவையில்லாத பொருள்கள் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது தகாத தோரணையில், வடிவத்தில் கடவுள் சிலைகள் இருந்தாலோ உடனடியாக அகற்றி விட வேண்டும். இதை செய்ய தவறும்பட்சத்தில் பணப்பிரச்னை, உடல் நிலை சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்