தமிழ் செய்திகள்  /  Astrology  /  How To Know Sanyasa Yogam In Astrology

Sanyasa Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சந்நியாசி யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Mar 06, 2024 03:06 PM IST

”சந்நியாசி யோகம் உள்ள ஜாதகர்கள், உலக இன்பங்களில் ஈடுபாடு இல்லாமல், ஆன்மீக தேடலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்”

சந்நியாச யோகம்
சந்நியாச யோகம்

ட்ரெண்டிங் செய்திகள்

“கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்கில் கெதியுள்ள சந்நியாச யோகம் யோகம்” என புலிப்பாணி சித்தர் கூறுகிறார். 

அதாவது ஒருவரது ஜாதகத்தில் கர்மாதிபதி என அழைக்கப்படும் பத்தாம் அதிபதியுடன் இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் கூடி 2, 4, 7, 8, 10 மற்றும் 12 ஆம் இடங்களில் நிற்கும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் சந்நியாசம் எனப்படும் துறவறம் செல்வர் என்பது விதி என ஜோதிடர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் கூறுகிறார். 

சந்நியாசி யோகம் உள்ள ஜாதகர்கள், உலக இன்பங்களில் ஈடுபாடு இல்லாமல், ஆன்மீக தேடலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். துறவு வாழ்க்கையை மேற்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு அதிகம் இருக்கும் என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது, இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் மனைவியோ அல்லது கணவரையோ பிரிந்து நீண்ட நாட்கள் மறுமணம் செய்யாமல் தனிமையில் இருப்பவர்களுக்கும் இந்த அமைப்பு பொருந்தும்.

ஜாதகத்தில் ஒரு சிலருக்கு சந்நியாசி யோகம் இருந்தாலும், அது ஜாதகரின் விருப்பம் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகளை பொறுத்து துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வைக்கும் என்பது ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. 

இதுமட்டுமின்றி,  சந்நியாசி யோகம் என்பது ஒரு ஜோதிட கணிப்பு மட்டுமே. ஜாதகத்தில் சந்நியாசி யோகம் இல்லை என்றாலும், துறவு வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். துறவு வாழ்க்கை என்பது ஒரு தனிப்பட்ட தேர்வு என்பது ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. 

WhatsApp channel

டாபிக்ஸ்