தமிழ் செய்திகள்  /  Astrology  /  How To Get Maha Lakshmi Kataksham In Home?

Goddess Lakshmi: வீட்டில் மகாலட்சுமி குடியேற வேண்டுமா?..இதை மட்டும் செய்ய மறக்காதீங்க!

Karthikeyan S HT Tamil
Jan 30, 2024 06:13 PM IST

அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்க வேண்டும் எனில் செல்வ வளம் பெருக வேண்டும் எனில் நாம் சில காரியங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னோர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர்.

மகா லட்சுமி
மகா லட்சுமி

ட்ரெண்டிங் செய்திகள்

மஞ்சள், குங்குமம் லட்சுமிக்கு உகந்த மங்களகரமான பொருளாக கருத்தப்படுகிறது. எனவே, நம் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு, மஞ்சள், குங்குமம், பூ, மஞ்சள் கிழங்கு, குடிப்பதற்கு தண்ணீர், ஜாக்கெட் பிட், புடவை என வழங்குவது முந்தைய ஜென்மங்களில் நாம் செய்த பாவங்களெல்லாம் விலகும் என்பது ஐதீகம்.  வீடுகளில் உள்ள பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும். மாங்கல்ய வரம் கிடைக்கப் பெறுவோம். 

அதேபோல், இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத்துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது. எனவே தான் பணத்தை போலவே உப்பையும் கடனாக கொடுக்க கூடாது என்பார்கள்.

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் மகாலட்சுமி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே, நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி தேவி நிரந்தர வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம். இப்படி செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விளக்கு ஏற்றுவது போலவே வெள்ளி விளக்கு வீட்டில் இருந்தால் அவற்றையும் ஏற்றி வைப்பது விசேஷம். குறிப்பாக வெள்ளிக் கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்