தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rock Salt: தீராத கடன் பிரச்னையில் இருந்து தப்பிக்க வேண்டுமா?.. கல் உப்பு ஒன்று இருந்தாலே போதும்!

Rock Salt: தீராத கடன் பிரச்னையில் இருந்து தப்பிக்க வேண்டுமா?.. கல் உப்பு ஒன்று இருந்தாலே போதும்!

Aarthi Balaji HT Tamil
Apr 15, 2024 12:01 PM IST

கடன் பிரச்னையில் இருந்து விடுபட நான் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் கல் உப்பு ஒன்றே போதும்.

உப்பு
உப்பு (Freepik)

ஒவ்வொரு பிரச்சனைக்கும் செய்ய வேண்டிய பரிகாரங்களையும் அறிஞர்கள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். மேலும் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபட சில பரிகாரங்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக கல் உப்பைக் கொண்டு சில விஷயங்களைச் செய்வது உங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் என்று கூறப்படுகிறது. அத்தகைய சில நம்பிக்கைகள் இதோ..

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட நான் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் கல் உப்பு ஒன்றே போதும். இதை திங்கட்கிழமை செய்தால் லட்சுமிதேவி வீட்டில் அருள் கொடுத்து தங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.

கல் உப்பு பரிகாரம் செய்வது எப்படி

முதலில் கல் உப்பு பரிகாரம் செய்ய வேண்டிய நேரம் இருக்கிறது. திங்கட்கிழமை சனி ஓரையில் தான் இதை செய்ய வேண்டும்.

முதலில் பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு மனதார இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டு கைப்பிடி அளவு கல் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூஜையறை முன்பு கல்லுப்புடன் அமர்ந்து 15 நிமிடங்கள் வரை இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்திடம் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து கொடுக்கும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

அருகில் ஒரு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

15 நிமிடங்கள் வணங்கி முடித்தவுடன் இரண்டு கையில் இருக்கும் கல் உப்பை எடுத்து அந்த தண்ணீரில் விட்டு கரைத்து விடவும்.

இதன்மூலம் தங்களுக்கு இருக்கும் கடன் தண்ணீரில் கலந்த உப்பு போல் மறைந்து விடும் என்பது நம்பிக்கை.

கல் உப்பை ஒரு சிறிய காகிதத்தில் போர்த்தி உங்கள் பணப்பையில் வைக்கவும். அப்படி போட்டால் பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும். சிரமங்கள் நீங்கும்.

வீட்டைக் கழுவும் போது அந்தத் தண்ணீரில் கல் உப்புடன் சிறிது மஞ்சளைச் சேர்க்கவும். உப்பு கரைந்த பிறகு, அந்த தண்ணீரைக் கொண்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேறும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது மற்றும் எல்லாம் நன்றாக நடக்கும். குறிப்பாக நிதி ஆதாயம். மேலும், வாகனங்களை கழுவும் போது, ​​கல் உப்பு கலந்த நீரில் கழுவுவது மிகவும் நல்லது. தோசை நீங்கி பாதுகாப்பாக இருக்கும். இதை உங்கள் குளியல் நீரில் சேர்ப்பதால் மனநல பிரச்சனைகள் குறையும் என்பது நம்பிக்கை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்