Rasi Palan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. பிப்ரவரி 4ஆம் தேதி எப்படி இருக்கு!
Rasi Palan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு பிப்ரவரி 4ஆம் தேதி எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்ப்போம்.

Rasi Palan: கிரக ராசிகளின் இயக்கத்தை வைத்து ஒருவரின் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. நாளை பிப்ரவரி 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடலாம்.
மத நம்பிக்கைகளின்படி, அனுமனை வணங்குவது பயம், துக்கம் போன்றவற்றை நீக்குகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, பிப்ரவரி 4ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பிப்ரவரி 4ஆம் தேதி எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும், யார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். அதன்படி, வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மேஷ ராசி முதல் கன்னி ராசியினருக்குப் பலன்கள் எவ்வாறு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேஷ ராசி முதல் கன்னி ராசி வரை பிப்ரவரி 4ஆம் தேதி எப்படி இருக்கும்?:
மேஷம்: வாழ்நாள் உறவில் இருப்பவர்கள், தொடர்ந்து பேசுவது முக்கியம். நிலுவையில் உள்ள எந்தவொரு பிரச்னையையும் நேர்மையுடன் கையாளுங்கள். பிணைப்பை வலுப்படுத்தவும், உங்கள் காதல் துணையுடன் நெருக்கமாக இருக்கவும் பிப்ரவரி 4ஆம் தேதி ஒரு சிறந்த நேரம் ஆகும்.
ரிஷபம்: புதிய அனுபவங்களுக்குத் மனம் திறந்திருங்கள் மற்றும் நம் உழைப்பின் மீதான செயல் முறையை நம்புங்கள். உங்கள் காதல் வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தைக் கொடுக்கும். நீங்கள் சிங்கிளாக இருந்தால், அது காதல் இணைப்பாக மாறும். புதிய வாய்ப்புகளுக்கு திறந்த மனதுடன் இருங்கள்.
மிதுனம்:
பிப்ரவரி 4ஆம் தேதி மிதுன ராசியினருக்கு மிகவும் அன்பு ததும்பும் நாளாக இருக்கும். நீண்ட தூரத்தில் வாழ்க்கைத்துணையைக் கொண்ட மிதுன ராசியினர், அவர்களுக்கு இடையிலான தூரத்தை அன்பின்மூலமும் பேச்சின்மூலமும் குறைக்க முடியும். பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக மன அழுத்தம் ஆகாமல் இருக்க நன்கு ஓய்வு எடுங்கள்.
கடகம்: பிப்ரவரி 4ஆம் தேதி, கடக ராசியினருக்கு பரபரப்பான நாளாக இருக்கும். ஒரு பணி அல்லது செயல் திட்டத்தைக் கொண்ட நபர்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்குவதில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள். காதல் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, காலையில் வேகமாக எழுந்து திட்டங்களை சரிசெய்யுங்கள்.
சிம்மம்:
பிப்ரவரி 4ஆம் தேதி, சிம்ம ராசியினர் புத்திசாலித்தனமான தேர்வுகளை மேற்கொள்வது பாதுகாப்புத்தன்மையைப் பராமரிக்கவும்; உங்கள் நிதி பாதுகாப்பை அதிகரிக்கவும் உதவும்.
கன்னி:
பிப்ரவரி 4ஆம் தேதி, கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். சிலர் இந்த நாளில் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தைச் செலவிடலாம். பணியிடத்தில் இருக்கும் அரசியலுக்கு பலியாகாமல் இருக்க எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்